குஜராத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி பாஜக வசம் இருந்து வருகிறது. அகமதாபாத்தின் மணி நகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, தற்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மருத்துவக் கல்லூரி, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஹிடேஷ் பரோட் கூறினார். குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானம் கடந்த ஆண்டு நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு கல்வியை தொடர முடியாது’- மத்திய அரசு தகவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM