அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – அண்ணாமலை கடுமையான விமர்சனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வந்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அவர்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவின் பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். 

இந்த நிலையில் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் 40 கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த இந்த சாதனைக்கு, வழக்கம்போல திமுக தனது திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா? தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக.

முதலமைச்சரின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே நிறைவேற்றித் தந்திருக்கலாமே.

திரௌபதி முர்மு நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு, பழங்குடியின மக்களும், நம் நாட்டின் உயர் பதவிகளில் அமர முடியும் என்பதை பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம்” நிரூபித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.