அனுராதபுர மிளகாய் பதப்படுத்தல் நிலையத்திற்கு கமத்தொழில் அமைச்சர் விஜயம்

கமத்தொழில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமத்தொழிலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில், ஏப்பாவெல கெடகாலய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய் செய்கையை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னால் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக ஆகியோர் பார்வையிட்டனர். 

அத்துடன் அறுவடை செய்யப்பட்ட பழுத்த மிளகாய்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காய்ந்த மிளகாய்க்காக பதப்படுத்தும், அனுராதபுர ஹூரிகஸ்வௌ மகுலேவ பிரதேசத்தில் அமைந்துள்ள மிளகாய் பதப்படுத்தல் நிலையத்தையும்; அவர்கள் பார்வையிட்டனர். 
 
பயிர்ச்செய்கையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஊடாக பயிர்ச்செய்கையாளர்களுக்கு அவசியமான தொழில்நுட்ப அறிவு, உபகரணம், நவீன பயிர்ச்செய்கை முறை என்பவற்றை புதிய கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி பூச்சிகளை அகற்றுவதற்கு அவசியமான புதிய முறைகள் மற்றும் சந்தைப்படுத்தலுக்குத் தேவையான சந்தை வாய்ப்புக்கள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. 
 
கிருமிநாசினி மற்றும் இரசாயனப் பசளை பயன்படுத்தலைக் குறைப்பதற்காக 80வீதம் சேதனப் பயிர்ச்செய்கை மற்றும் இயற்கை கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி இம்மிளகாய் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதால் சர்வதேச சந்தையில் நாட்டின் மிளகாய்க்கு அதிக வரவேற்புக் காணப்படுகிறது. 
 
எமது நாட்டில் மேலும் மிளகாய் உற்பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு சாத்தியப்பட்டாலும், நாட்டின் மிளகாய்த் தேவையில் 60மூஇற்கும்  அதிகமான மிளகாய் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது.
 
இவ்வாறு இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படும் பணத்தை, விவசாயிகளுக்கு வழங்கி, நாட்டின் நுகர்வுக்கு அசியமான பச்சை மற்றும்; காய்ந்த மிளகாயை உள்ளுரிலேயே உற்பத்தி செய்வதனால், டொலர்களை சேமித்து, நாட்டிற்கு அவசியமான வெளிநாட்டு அந்நியச் செலாவணியை  பெற்றுக்கொள்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். 
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மிளகாய் உலகிலுள்ள அதிக இரசாயனம் மிக்க பொருள் பயன்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக நமது நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ள நச்சுப் பொருட்கள், அந்நாடுகளில் மிளகாய்ப் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நமது நாட்டில் அறுவடை செய்யப்படும் மிளகாய் மிகவும் சிறந்தவை என பயிர்ச்செய்கையாளர்கள் அங்கு தெரிவித்தனர்.  
 
கமத்தொழிலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஊடாக ஒரு பயிர்ச்செய்கையாளர் ஒரு ஏக்கரில் 74இலட்ச ரூபா இலாபத்தை ஆறு மாதங்களுக்குள் ஈட்டிக்கொள்வதாகவும் பயிச்செய்கையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
பச்சை மிளகாய் சந்தையில் அறுவடைக் காலத்தில் விலை குறைவதுடன், பச்சை மிளகாய், பழுப்பதை விட காய்ந்த மிளகாயாக மாற்றும் திட்டம்;, அனுராதபுர ஹூரிகஸ்வௌ மகுலேவ கிராமத்தில் பயிர்ச்செய்கையாளர் சங்கத்;திற்கு ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
 
இங்கு இயந்திரத்தினால் மிளகாய் உளர்த்தப்படுவதுடன், அதனால் சுத்தமான காய்ந்த மிளகாயை விரைவாக சந்தைக்கு அனுப்பக் கூடியதாக உள்ளது. இதனால்; பயிர்ச்செய்கையாளர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் வருமானமும் கிடைக்கிறது. பச்சை மற்றும் காய்ந்த மிளகாய் சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்பும் கிடைக்கிறது. 
 
Fathima nasriya
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.