அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில்
வெளிவந்த படம் ‘சினம்’. இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார்.
இப்படத்தின் கால நேரம் 1:55 நிமிடம். இப்படத்தின் கதை ‘ஃபேமிலி ஆடியன்ஸ்சை’ கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மாஃபியா, தடம், குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ் அந்த வரிசையில் அருண் விஜய்க்கே உரித்த பாணியான ‘க்ரைம் த்ரில்லரில்’ மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். இப்படத்தில் சற்று எதார்த்த நடிப்பை அனைவரும் ரசிக்கும் விதமாக அருண் விஜய் கையாண்டுள்ளார். கிடைகும் தருணத்தை நடிப்பில் தன்வசம் வைத்து கொண்டார் காளிவெங்கட்.
பாலக் லால்வனியின் நடிப்பும் கதைக்கு ஏற்றவாறு நன்றாக அமைத்திருந்தது. இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு இரவு தன் மனைவியை முகம் தெரியாத நபர்கள் கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அவர்கள் யாரென்று கண்டுபிடித்து தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கில் களம் இறங்குகிறார் படத்தின் கதாநாயகன். படத்தின் முதல் பாதி காதல், கல்யாணம், கடமை , கொலை என கேள்வியில் முடிய! இன்வெஸ்டிகேஷன் மூலம் அக்கேள்விக்கு படத்தின் கதாநாயகன் பதிலை தேடி வெற்றிக்கண்டார? என்பதே இப்படத்தின் மீதி கதை.