வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாமர்கண்ட்: கோவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக, விநியோக சிங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவை உற்பத்தி மையமாக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கோவிட் பெருந்தொற்றில் இருந்து உலகம் தற்போது மீண்டு வருகிறது. கோவிட் மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவை, உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். தற்போது இந்தியாவில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன. அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறோம்.
இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பெருமையாக சொல்கிறேன். இவ்வாறு மோடி பேசினார். மேலும், ஆப்கனுக்கு பாகிஸ்தான் வழியாக உணவுப்பொருட்கள் இந்தியா அனுப்பி வைத்துள்ளதை மோடி சுட்டி காட்டினார் .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement