மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் பற்றி அறிந்திருக்கலாம். எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) விரைவில் அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மால் கேப் பங்கின் சந்தை மூலதனர் 650.80 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள முன்னணி பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகும்.
இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் தெரியுமா?
எல்டெகோ குழுமம்
எல்டெகோ குழுமம் இரண்டு முக்கிய நிறுவனங்களை அதன் பட்டியலில் கொண்டுள்ளது. ஒன்று எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) .மற்றொன்றுஎல்டெகோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் ப்ராபர்டீஸ் லிமிடெட் (EIPL) நிறுவனங்கள் அடங்கும். இதில்எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 1985ல் தொடங்கப்பட்டது.
டிவிடெண்ட் திட்டம்
லக்னோவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்த துறையில் வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றது. இந்த குழுமம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மே 13, 2022 அன்று நடந்த இயக்குனர் குழு கூட்டத்தில், இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 8 ரூபாய் (400%), இதன் முகமதிப்பு ஒரு பங்குக்கு 2 ரூபாயாகவும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
ரெக்கார்டு தேதி
இதற்கிடையில் செப்டம்பர் 21 அன்று ரெக்கார்டு தேதியாக அறிவிக்கப்பட்டது. வருடாந்திர கூட்டத்தில், இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்டெகோ ஹவுஸிங் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஒரு பங்கின் விலையானது கடந்த அமர்வில் 661.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
மல்டிபேக்கர் பங்கு
கடந்த 10 வருடங்களில் இந்த நிறுவன பங்கின் விலைய்யானது 1956.77% ஆக லாபத்தினை கொடுத்துள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளில் 276.87% லாபத்தினை கொடுட்துள்ளது. இதே கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு 73.26% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே கடந்த ஒரு வருடத்தில் 7.54% ஏற்றம் கண்டுள்ளது. நடப்பு ஆண்டில் இது வரையில் 24.64% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 23.56% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் 52 வார உச்சம் 800 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 498.35 ரூபாயாகும்.
This multibagger plans to give 400% final dividend soon: do you have this stock?
Eldeco Housing & Industries Ltd will pay a final dividend of Rs 8 per share (400%), the face value of which is Rs 2 per share.