சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
ரொம்ப சந்தோஷம்
கேள்வி: வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தது குறித்து….
பதில்: வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக நான் ஆடிஷனுக்கு சென்றபோது, சிம்புவும் உடன் இருந்தார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என்னை பார்த்து, இந்த படத்தின் கதாநாயகின்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்பொழுது வரைக்கும் என்னால் நம்ப முடியவில்லை. பெரிய கதாநாயகரோட நானும் ஒரு பெரிய பேனர் படத்தில நடித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்றார்.
100 சதவீதம் உழைப்பு
கேள்வி: இயக்குநர் சசி குறித்து நீங்கள் கூற விரும்புவது
பதில்: இயக்குநர் சசி என்னை ஒரு வானவில் மாதிரி ஒரு கோடி வானம் திரைப்படத்தில் காட்டியிருப்பார். அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். நானும் 100 சதவீத உழைப்பை கொடுத்துள்ளேன் என்றார்.
தனித்தன்மை
கேள்வி: தமிழ் சினிமாவில் உங்களுடைய பங்களிப்பு என்ன மாதிரி இருக்கும்?
மற்ற எல்லாத் துறைகளில் இருக்குற மாதிரி கடினம் சினிமாத் துறையிலும் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும். அதனால் சினிமாவில் என்னுடைய கடின உழைப்பு இருக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ் இண்டஸ்ட்ரியில் முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறது ரொம்ப பிரமிப்பாக இருக்கும். அந்த நாளை ரசிகர்கள் ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். நான் நடிகை சமீரா ரெட்டி போல் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அவர் ஒரு நல்ல நடிகை. ஆனாலும் என்கிட்ட தனித்தன்மைகள் நிறைய இருப்பதாக நான் நம்புகிறேன் என்றார்.
5 மொழிகள் தெரியும்
கேள்வி: உங்க அப்பா உங்களுக்கு கூறிய அறிவுரை என்ன?
பதில்: அப்பா ஒரு வாய்ஸ் ஆர்டிஸ்ட். அவருக்கு மொழிகளின் மீது அதிக பற்று உண்டு. என்னையும் நிறைய உற்சாகப்படுத்துவார். என்னிடம் அவர் கூறுகையில், உன்னோட படத்திற்கு நீ டப்பிங் செய்தால் மட்டுமே உண்மையான எமோஷன் இருக்கும். அந்த காட்சியினுடைய எமோஷன் மத்தவங்கள விட உனக்குத்தான் நல்லா தெரியும்னு அப்பா சொல்வார். எனக்கு ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், கொஞ்சம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகள் தெரியும்.
குழி விழும்
கேள்வி: உங்களுக்கும், சிம்புவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
பதில்: எனக்கும், எனது அம்மாவுக்கும் கன்னத்தில் குழி விழும். அது போல் நடிகர் சிம்புவுக்கும் கூட கன்னத்தில் குழி விழும். எனது அம்மா தான் என்னுடைய ரோல் மாடல். அவர் என்னிடம் கூறுகையில், நீ என்ன நினைக்கிறயோ அதை நூறு சதவீதம் சிறப்பாக செய். தப்புன்னா நான் உனக்கு சொல்றேன்னு அப்ப அந்த விஷயத்தை நீ மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சுயமரியாதை அவசியம்
கேள்வி: பெண்களின் பாதுகாப்பு குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இப்பொழுது எல்லாம் பெண்கள் ரொம்ப சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அது ரொம்ப நல்ல விஷயம். பெண்கள் அனைவருக்கும் சுயமரியாதை அவசியம். எங்க சுயமரியாதை மறுக்கப்படுதோ, பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அப்பொழுது பெண்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட வேண்டும். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/goQ-hJt6EP4 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.