ஆமதாபாத், :குஜராத்தில், ஒரு பெண் அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறி, தன்னை மோசடியாக திருமணம் செய்ததை, எட்டு ஆண்டுகளுக்குப் பின் தெரிந்துகொண்ட மனைவி, போலீசில் புகார் அளித்தார்.குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர், ௨௦௧௧ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த நபர் ஆண் இல்லை என்பதை, அப்பெண் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தெரிந்துகொண்டார்.
சாலை விபத்து
இது குறித்து அந்த பெண் போலீசில் அளித்த புகார்:கடந்த ௨௦௧௪ல் வீரஜ் வர்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். தேன் நிலவுக்காக காஷ்மீர் சென்று வந்தோம். ஆனால், என் கணவர் தாம்பத்ய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடாமல், தினந்தோறும் ஒரு காரணம் கூறி தவிர்த்து வந்தார். இது குறித்து அவரிடம் வற்புறுத்தி கேட்டபோது, சில ஆண்டுகளுக்கு முன், ரஷ்யாவில் இருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும், அதனால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது எனவும் கூறினார்.
மிரட்டல்
சிறு அறுவைச் சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் எனவும் கூறினார்.ஆனால் திடீரென ஒரு நாள், ‘நான் அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறினேன், இதை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, என்னை மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண், புகாரில் தெரிவித்துள்ளார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ‘வீரஜ் வர்தனின் உண்மையான பெயர் விஜைதா. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement