கடலில் கலைஞரின் பேனா சின்னம்: ஒன்றிய அரசு க்ரீன் சிக்னல்!

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் 39 கோடி ரூபாய் செலவில், 2,21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதிக்கு பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் கலைஞர் கருணாநிதியை கௌரவிக்கும் விதத்தில் அவரது நினைவிடத்துக்கு அருகே கடலுக்குள் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும், 80 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதும் கலவையான விமர்சனங்கள் வந்தன. இவ்வளவு கோடி ரூபாய் செலவில் ஏன் நினைவிடம், நினைவு சின்னம்? மக்கள் வரிப்பணத்தில் இதை செய்வதற்கு பதிலாக திமுக நிதியிலிருந்து செய்ய வேண்டியது தானே என எதிர்கட்சிகள் விமர்சித்தன.

கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதற்காக அனுமதி பெறுவதற்காக ஒன்றிய அரசை தமிழக பொதுப் பணித்துறை அணுகியிருந்தது. தற்போது இதற்கான முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞரின் நினைவிடத்திலிருந்து சில மீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டு அங்கு சென்று பேனா சின்னத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கான முதற்கட்ட அனுமதி மட்டும் தற்போது கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.