கேப்டனின் தேமுதிக படுத்தே விட்டது- பிரேமலதாவை டென்ஷன் ஆக்கும் எடப்பாடியார்!

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், ஆளும் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் முதல் போனஸ் ஆக சொத்துவரி உயர்த்தப்பட்டது. இப்பொழுது மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் மின்கட்டண உயர்வு. பொங்கல் என்றாலே திராவிட மாடல் ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. திமுக பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளம் தரமற்ற முறையில் இருந்தது, கடுகு பதில் இலவம் பஞ்சு விதைகள் கொடுத்திருந்தார்கள் , அரிசியில் வண்டு என பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்திருந்தனர்.

அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்பொழுது திமுக ஆட்சி அமைந்தது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுகவிற்கு எதிராக அறிக்கை விட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து பேசுகையில்; அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார்.

அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றார். பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவுக்கு சென்ற பிறகு, விஜயகாந்தின்

படுத்தே விட்டது. கட்சியை மூழ்கடித்து விட்டதாக கடுமையாக சாடினார். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை, தயவு செய்து குறை கூறாமல் இருங்கள். இல்லையென்றால் சென்றுவிடுங்கள். நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என கடுமையான விமர்சனத்தை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்தார்.

இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.