சென்னை: கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கும் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2018-ல் மார்ச் மாதம் வாகன சோதனையில் போது ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கோவை போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.