மக்களுக்குத் தேவையான உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் கேகாலை மாவட்டத்தின் நெலும்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சதொச நுகர்வோர் விற்பனை நிலையம் இன்று (16) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதாரத்திற்கான இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சதொச விற்பனை நிலையம் கேகாலை மாவட்டத்தில் 18 வது கிளையாகவும், இலங்கையில் 445 வது கிளையாகவும் உள்ளது.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான திருமதி ராஜிகா விக்ரமசிங்க, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் பசத யாப்பா அபேவர்தன, வரக்காபொல மற்றும் கல்கமுவ பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், சதொச நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.