சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு போதும்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்குமான வர்த்தகச் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய முடியாத போட்டி மிகுந்த இந்திய சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தயாரிப்புக்கு மிகவும் முக்கியமான ஒன்று பேட்டரி. பேட்டரி தயாரிப்பில் பல முக்கிய மாற்றங்களையும் புதுமைகளையும் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் செய்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் ஒரு லித்தியம் பேட்டரி தொழிற்சாலை கூட இல்லாத நிலையில் இந்திய தயாரிப்புகளை எப்படிக் குறைவான விலையில் விற்க முடியும், எப்படி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்ற அடிப்படை கேள்வி எல்லோருக்கும் இருக்கும் வேளையில்..

இதற்கான பதில் திருப்பதியில் கிடைத்துள்ளது…

வாவ்.. இனி தங்கம், சமையல் எண்ணெய் விலை இன்னும் குறையலாம்.. ஏன் தெரியுமா?

ஆந்திர பிரதேச

ஆந்திர பிரதேச

இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகவும் பிரபலமான திருப்பதி-யில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Munoth Industries நிறுவனம் சுமார் 165 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் லித்தியம் பேட்டரி உற்பத்தி ஆலையை மத்திய அரசின் மாநிலங்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் திருப்பதி வந்து நேரில் திறந்து வைத்தார்.

திருப்பதி

திருப்பதி

திருப்பதியில் அமைக்கப்பட்டு இருக்கும் Munoth Industries நிறுவனத்தின் தொழிற்சாலை தான் இந்தியாவின் முதல் லித்தியம் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையாகும். இந்தத் தொழிற்சாலை இரண்டு பெரிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

சென்னை Munoth Industries
 

சென்னை Munoth Industries

இப்புதிய தொழிற்சாலையில் சுமார் 270 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டு உள்ளதால் தினமும் 10Ah 20000 பேட்டரிகளைத் தயாரிக்க முடியும். இந்தப் பேட்டரிகள் தற்போதி பவர்பேங்க்-ல் பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய சந்தை தேவையில் சுமார் 60 சதவீதமாகும்.

எலக்ட்ரானிக்ஸ் கருவிகள்

எலக்ட்ரானிக்ஸ் கருவிகள்

மேலும் இந்தத் தொழிற்சாலையில் மொபைல் போன், ஹெட்போன், ஸ்மார்ட்வாட்ச் உட்பட அனைத்து கருவிகளுக்குமான பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளது.

சீனா, தென் கொரியா, வியட்நாம், ஹாங்காங்

சீனா, தென் கொரியா, வியட்நாம், ஹாங்காங்

தற்போது இந்தியா உற்பத்தி நிறுவனங்கள் லித்தியம் ஐயான் பேட்டரியை சீனா, தென் கொரியா, வியட்நாம், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் Munoth Industries நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை லித்தியம் ஐயான் பேட்டரி இறக்குமதியை குறைக்கும்.

லித்தியம் ஐயான் பேட்டரி

லித்தியம் ஐயான் பேட்டரி

இந்த லித்தியம் ஐயான் பேட்டரி தயாரிப்பும், அதன் தொழில்நுட்பமும் பிற நிறுவனங்களும் பயன்படுத்தத் துவங்கினால் விரைவில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்க முடியும். இது சாத்தியமானால் எலக்ட்ரிக் கார் விலை பெரிய அளவில் குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chennai based Munoth Industries opens India’s first lithium cell manufacturing plant in Tirupati

Chennai based Munoth Industries opens India’s first lithium cell manufacturing plant in Tirupati with 165 crores investment. this new facility can produce 20,000 cells of 10Ah capacity daily. In India lithium-ion cells imported from China, South Korea, Vietnam and Hong Kong.

Story first published: Friday, September 16, 2022, 13:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.