சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்கக் கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா சிலைக்கு மத்திய அரசு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது முதற்கட்ட அனுமதி மட்டுமே. இன்னமும் பல்வேறு அனுமதியை பெற வேண்டியது உள்ளது என தெரிவித்தார்கள்.
ஏற்கெனவே மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்து சென்று இந்த பேனா சிலையை பார்க்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை போன்று இந்த பேனா சிலை இருக்கும். ஆனால், அதைவிட சில அடி உயரம் அதிகமாக இருக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM