கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.