தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டில்லியில் மீண்டும் பழைய மதுபான கொள்கை அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் டில்லியில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இன்று (செப்.,16) மீண்டும் டில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

latest tamil news

மதுபான தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள் இத்தொழிலில் உள்ள சப்ளை செயின் தொடரில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.