தவறுதலாக டீமேட்டுக்கு வந்த ரூ.11,677 கோடி.. அடுத்து நடந்த சம்பவத்தை பாருங்க!

டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சந்தை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் திடீரென 11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் எப்போதாவது வங்கி கணக்குகளில் நடப்பது ஒன்று தான். டெக்னிக்கலாக ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் சில மணி நேரங்களில் சரி செய்யப்படுவதும் உண்டு.

அப்படி தான் பங்கு சந்தை முதலீட்டாளரின் கணக்கில் பல ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

டீமேட்டில் ஆச்சரியம்

டீமேட்டில் ஆச்சரியம்

அகமதாபாத்தினை சேர்ந்த ரமேஷ் சாகர் என்பவரின் டீமேட் கணக்கில் தான் தீடிரென இவ்வளவு கோடி ருபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவருக்கு தெரிய வந்ததும் அவர் சந்தோஷப்படுவதா? அடுத்து என்ன செய்வது என திகைப்பில் ஆழ்ந்துள்ளார். எனினும் அவரின் சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. வெறும் 8 மணி நேரம் மட்டுமே நீடித்துள்ளது.

பங்கு சந்தை முதலீட்டாளர்

பங்கு சந்தை முதலீட்டாளர்

ரமேஷ் சாகர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு முதலீட்டாளர். கடந்த ஆண்டு தான் கோடக் செக்யூரிட்டிஸில் தனது டீமேட்டினை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஜூலை 22ம் தேதியன்று தான் அவரது டீமேட் கணக்கில் 116,77,24,43,277.10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அன்றே அவர் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து, 5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாகவும் கூறப்படுகின்றது.

 

டீமேட் எதற்காக
 

டீமேட் எதற்காக

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு டீமேட் குறித்து தெரிந்திருக்கலாம். பங்கு சந்தையில் வணிகம் செய்யத் தேவையான ஒரு கணக்கு ஆகும். இதன் மூலம் உங்களது பங்கு வணிக பரிவர்த்தனையை முழுமையாக காண முடியும்.

 பலருக்கும் ஆச்சரியம்

பலருக்கும் ஆச்சரியம்

ரமேஷ்-க்கு மட்டும் இந்த ஆச்சரியம் அல்ல, அன்றைய தினத்தில் பலருக்கும் இவ்வாறு தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், அது சில மணி நேரங்களுக்கு பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gujarat man gets Rs 11677 crore in Demat account by mistake

A demat account of a stock market investor from Ahmedabad, Gujarat was suddenly credited with Rs 11,677 crore and then withdrawn hours later.

Story first published: Friday, September 16, 2022, 9:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.