‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற நூல் வெளியிட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ” ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் பயனாக மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என காங்கிரஸ்காரர்கள் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால், காங்கிரசில் இருந்து முக்கியமான தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
ராகுலின் பாத முட்டாள்தனமாக திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது கட்சிக்கார்களே விமர்சித்து வருகின்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், ஏதோ ராகுலின் வசதி்க்காக யாத்திரை நடத்தப்படுவதாகவே தெரிகிறது. இந்த நடைபயணத்துக்கான மேப்பை எடுத்து பார்த்தாலே இது புரியும். கட்சியும், கட்சித் தலைமையும் இந்த லட்சணத்தில் இருக்கும்போது எங்கிருந்து காங்கிரஸ் ஆட்சி மலரும்?
எங்கெல்லாம் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது? எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை? அங்கெல்லாம் நடைபயணம் போக ராகுல திட்டமிடவில்லை. 18 நாட்கள் கேரளாவில் உட்கார்ந்து என்ன செய்யப் போகிறார்? நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசுபவர்களுடன் இவருக்கு என்ன பேச்சு?
கட்சி பொறுப்பும் வேண்டாம், தலைமைப் பதவியையும் ஏற்கமாட்டேன், ஆனால் தலைமை பதவிக்கான மரியாதையை மட்டும் எல்லோரும் தமக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல் எதிர்பார்க்கிறார்.
ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை நீ்க்கிவிட்டால், அவர் வயநாடு தொகுதியின் எம்பி மட்டுமே. ஜனநாயக நாட்டில் நல்ல எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் காங்கிரசில் ராகுல் காந்தி தலைமையில் இருக்கும்வரை அத்தகைய எதிர்க்கட்சியை நாம் எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்துவிட்டது. இனி அந்த கட்சி வளர வாய்ப்பே இல்லை என்று ஆவேசமாக கூறினார் குஷ்பு.