பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை

மும்பை: தரகு நிறுவனமான நிர்மல் பேங்க் 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இதில் யுபிஎல், பிஐ இண்டஸ்ட்ரீஸ், சுமிடோமோ கெமிக்கல், சிஎஸ்எம் நிறுவனம், அனுபம் ரசாயன் உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

ஏன் இந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது? என்ன காரணம்? இலக்கு விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..!

பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

சுமிடோமோ கெமிக்கல்ஸ் பங்கின் இலக்கு விலையினை 529 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே கொரோமண்டல் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் இலக்கு விலையினை 1126 ரூபாயாகவும், அனுபம் ரசாயன் நிறுவனத்தின் இலக்கு விலை 838 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

ஏன் ஏற்றம்?

ஏன் ஏற்றம்?

நிர்மல் அறிக்கையின் படி, கால நிலை மற்றம், சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, சரக்கு அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கெமிக்கல் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்ளலாம். குறிப்பாக இந்தியா, ஐரோப்பிய நாடுகள் சவால்களை எதிர்கொள்ளலாம். இதன் காரணமாக கெமிக்கல்கள் விலை அதிகரிக்கலாம். இது கெமிக்கல் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பட வழிவகுக்கும். இது மார்ஜினில் வளர்ச்சியினை கூட்டலாம். இதன் காரணமாக இந்த நிறுவன பங்குகள் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பிஐ இண்டஸ்ட்ரீஸ்
 

பிஐ இண்டஸ்ட்ரீஸ்

பிஐ இண்டஸ்ட்ரீஸ்-ஐ பொறுத்தவரையில் பார்மா, விவசாயம் அல்லாத துறை, பார்மா துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. இதனால் கெமிக்கல் நிறுவனங்களின் வளர்ச்சியானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் யுபிஐ பங்கின் இலக்கு விலையானது 1144 ரூபாயாகவும், இய்தே பிஐ இண்டஸ்டீரீஸ் இலக்கு விலையானது 3979 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

ஆதரவாக அமையலாம்

ஆதரவாக அமையலாம்

விவசாயத்தில் நல்ல வருமானம், மண்ணின் பதம், நீர் சேமிப்பு உள்ளிட்ட பலவும் ராபி பருவத்திற்கு சாதகமானதாக அமையலாம். இது கெமிக்கல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக அமையலாம். எனினும் கன்டெய்னர் பிரச்சனை, சரக்கு கட்டணத்தில் பிரச்சனை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

தாக்கம் இருக்கலாம்

தாக்கம் இருக்கலாம்

தற்போது இது எனர்ஜி விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மூலதன பொருட்கள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நிகர மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தவிர புதிய பொருட்காள் மற்றும் தொழில்துறையில் புதிய மூலதனம் என பல காரணிகளுக்கு மத்தியில் இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nirmal Bang 5 chemical stocks buy recommendation

Experts recommend 5 chemical stocks to buy including UPL, PI Industries, Sumitomo Chemical, Anupam Raayan

Story first published: Friday, September 16, 2022, 19:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.