பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை டாப்ஸி; வைரலாகும் வீடியோ!

சமீபகாலமாக ‘#Boycott’ என்னும் ஹாஷ்டாக்குகள் பாலிவுட்டைப் பிடித்து ஆட்டி வருகிறது. இது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோபாரா’ படத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்படத்தின் வெளியீட்டையொட்டி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாலிவுட்டில் சர்ச்சையாகி வரும் ‘Boycott bollywood’ சர்ச்சைக் குறித்துப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் அனுராக், எதெற்கெடுத்தெல்லாம் ‘Boycott’ என்று கூறுவது சரியல்ல என்று கூறியிருந்தார். இதையடுத்து நடிகை டாப்ஸியும் `எங்கள் படத்தையும் ‘Boycott’ எனப் புறக்கணித்து ட்ரெண்ட் செய்யுங்கள்’ என்று கிண்டலாகப் பேசியிருந்தார். இது வைரலாகியதையடுத்து நெட்சன்கள் இப்படத்தையும் ‘Boycott’ என்று டிரெண்ட் செய்து அது படத்திற்கு ஒரு நெகட்டிவாக அமைத்தது.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில், டாப்ஸி தாமகமாக வந்தது குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்க, டாப்ஸிக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதமானது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருந்தது. இப்படி நடிகை டாப்ஸிக்கும், பத்திரிகையாளருக்கும் இடையே சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது, பத்திரிகையாளர் ஒருவரிடம் டாப்ஸி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், சமீபத்தில் நடைபெற்ற ‘OTTplay Awards 2022’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்ஸியிடன், பத்திரிகையாளர் ஒருவர் டாப்ஸி நடித்த ‘டோபாரா’ படம் மீது எழும் விமர்சனங்கள் குறித்தும் நெகட்டிவ் கமென்ட்டுகள் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். அதற்கு டாப்ஸி, ‘எந்தப் படத்திற்கு நெகட்டிவ் கமென்ட்டுகள் வராமல் இருந்துள்ளது?’ என்று பதிலளித்தார். பின்னர், அந்தப் பத்திரிகையாளர் அடுத்த கேள்விக்கு நகரும்போது டாப்ஸி குறுக்கிட்டு ‘முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள், அதன்பின் நீங்கள் கேட்ப்பதற்கு பதிலளிக்கிறேன்’ என்று விவாதம் செய்கிறார். இதையடுத்து டாப்ஸி, ‘முதலில் நன்றாக யோசித்து ஹோம் வொர்க் செய்துவிட்டு வந்து கேள்விகளைக் கேளுங்கள்’ என்று அழுத்தமாகப் பதிலளித்தார். இந்த நிகழ்வு அங்கு சிறிது நேரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.