பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… இதுதான் விஷயம்!

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘உக்ரைனில் நிலவி வரும் போர் சூழலின் காரணமாக, மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினையும் ஏற்படுத்திட வேண்டும்’ என்று ஸ்டாலின் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த 2000 மாணவர்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இதனால் அவர்கள் தப்பித்தோம்; பிழைத்தோம் என்று இந்தியா திரும்பினர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து கொண்டுள்ளதால் அங்கு மருத்துவம் பயின்று வந்த இநதிய மாணவர்களின் எதிர்காலம் கேள்வி்ககுறி ஆகி உள்ளது.

இதனையடுத்து, உக்ரைனி்ல் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தாங்கள் படிப்பை தொடர அனுமதி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, உக்ரைன் மகுத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் படிக்க அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.