ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்துக்கு ஹைதராபாத்தில் புதிதாகக் கட்டப்படும் தலைமை செயலக பணிகளை நேற்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க் கையில் ஒளி ஏற்றி வைத்த டாக்டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமை செயலகத்துக்கு சூட்டப்படும். சட்டத்தை இயற்றும் இடத்தில் அம்பேத்கரின் பெயரை சூட்டுவதே நியாயமானதாகும். இது நம் நாட்டுக்கே முன்னு தாரணமாக திகழ வழி வகுக்கும். அனைத்து தரப்பு மக்களும் கவுரமாக வாழ வேண்டும் என்பதே அண்ணல் அம்பேத்கரின் கனவு. அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டம் பிரிவு 3-ன் படியே தெலங்கானா மாநிலம் உதய மானது. தெலங்கானா மாநிலம் உருவாக அம்பேத்கரும் ஒரு காரணம். இதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.