உலகில் சில நாடுகளில் தற்போது பரவிவரும் மற்றுமொரு புதிய கொரோனா டீயு.4.6 உபதிரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அதிகமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 3.3வீதமானவர்கள் இந்த உபதிரிபுத் தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது தற்போது 9வீதமாக அதிகரித்திருப்பதுடன்;; டீயு.4.6 தொற்றாளர்கள் இதற்கு சம வீதத்திலேயே அமெரிக்காவிலும் அதனை அண்மித்த சில நாடுளிலும் அடையாம்காணப்;படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக இந்த ஒமிக்ரோன் திரிபின் உபதிரிபான டீயு.4. என்பது, மேலும் பல உபதிரிபுகளை உருவாக்குகிறது. இது வேகமாகப் பரவினாலும்,; கடுமையான நோய் அறிகுறிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் விசேடமாக ஒமிக்ரோன் திரிபு கடுமையான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாததால், இந்தப் புதிய டீயு.4.6 உபதிரிபு அதற்கு சமாமானதாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த உபதிரிபு பற்றி பல ஆய்வுகள் இடம்பெற்று வருவதால் எதிர்காலத்தில் கொரோனா பற்றிய சரியான தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.