புரட்டாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21ம் தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.