பொன்னியின்
செல்வன்
பட
ப்ரமோஷனுக்காக
அதில்
நடித்த
நடிகர்கள்
அந்த
கேரக்டர்களாக
தங்க
ட்விட்டர்
பக்கத்தை
மாற்றி
அளவளாவி
வருகின்றனர்.
பட
ப்ரமோஷனுக்காக
எங்கள
போட்டு
வருத்தெடுக்கிறீர்களே
தாங்க
முடியலடா
சாமின்னு
நெட்டிசன்கள்
அலறுகிறார்கள்.
பொன்னியின்
செல்வன்
டீமை
வைத்து
மீம்ஸ்
போட்டு
தள்ளுகிறார்கள்.
பொன்னியின்
செல்வன்
டீமுக்கு
ஆதரவாகவும்
சிலர்
பதிவிடுகிறார்கள்.
வெற்றிகரமாக
ட்ரெய்லர்
ரிலீஸை
நடத்திய
பொன்னியின்
செல்வன்
குழு
கல்கியின்
பொன்னியின்
செல்வன்
கதையை
திரைப்படமாக
எடுக்க
பலர்
முயன்றும்
ஒன்றும்
நடக்காத
நிலையில்
இறுதியாக
மணிரத்னம்
லைகா
இணைந்து
சாத்தியப்படுத்தியுள்ளனர்.
முன்னணி
நடிகர்கள்
நடித்துள்ள
இப்படத்தின்
ஆடியோ
லாஞ்சில்
கமல்,
ரஜினி,
ஐஸ்வர்யா
ராய்,
ஏ.ஆர்.ரஹ்மான்
மற்றும்
படத்தில்
நடித்த
நடிகர்
நடிகைகள்
கலந்துக்கொண்டனர்.
படத்தைப்பற்றி
மற்றவர்கள்
பேசியதைவிட
ரஜினிகாந்த்
பேச்சு
அன்று
பெரிய
அளவில்
பேசப்பட்டது.

செப்
30
வெளியாகும்
பொன்னியின்
செல்வன்
படத்தை
வெற்றிப்படமாக்க
வேண்டும்
என்கிற
முனைப்பில்
படக்குழு
ஈடுபட்டு
வருகிறது.
படத்தின்
ஓடிடி
தள
உரிமை
125
கோடி
ரூபாய்க்கு
விற்கப்பட்டுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
இது
தவிர
தமிழகம்
தாண்டி
வெளியிடங்களில்
படத்தை
விநியோகம்
செய்பவர்கள்
லிஸ்ட்டையும்
வெளியிட்டுவிட்டார்கள்.
தமிழகத்தில்
யார்
விநியோகம்
செய்யப்போகிறார்கள்
அல்லது
நேரடி
விநியோகமா
என்பது
கேள்விக்குறியாக
உள்ளது.

கேரக்டர்
பெயருக்கு
மாறிய
பொன்னியின்
செல்வன்
நடிகர்கள்
பட
ப்ரமோஷனுக்காக
பல
வேலைகளை
ஆட்
ஏஜென்சிகள்
செய்வார்கள்.
அதேபோல்
பொன்னியின்
செல்வன்
பட
ப்ரமோஷனுக்காக
அதில்
சரித்திர
வேடங்களில்
நடித்த
கதாபாத்திரங்களின்
பெயர்களை
நடிகர்கள்
விக்ரம்,
கார்த்தி,
ஜெயராம்,
ஜெயம்
ரவி
உள்ளிட்டோர்
மாற்றிக்கொண்டு
தினமும்
ஏதாவது
ட்வீட்
போட்டு
வருகின்றனர்.
வந்திய
தேவனை
தஞ்சைக்கு
ஆதித்ய
கரிகாலன்
அழைப்பதும்
வந்திய
தேவன்
லீவு
சொல்வதும்
குந்தவை
எங்கே
எனக்கேட்பதும்
ஆரம்பத்தில்
வெகுவாக
ரசிக்கப்பட்டது.

ஆங்கிலம்
பேசும்
ஆதித்ய
கரிகாலன்
நான்
தஞ்சைக்கு
சென்று
நம்
அன்புப்படைகளை
சந்திக்க
வேண்டும்
நண்பா,
நீ
இளைப்பாறு
see
you
on
other
side
நண்பா
வந்திய
தேவா
என
ஆதித்ய
கரிகாலன்
விக்ரம்
ட்வீட்
போடுவதும்,
என்னுடைய
பாதுகாப்பில்லாமல்
நீங்கள்
எங்கும்
போக
முடியாது
அலுப்பாய்
இருந்தாலும்
வந்தே
தீருவேன்
என
பதிலுக்கு
கார்த்தி
வந்திய
தேவனாய்
போடுவதும்,
ஆதித்ய
கரிகாலன்
ஆங்கிலம்
பேசுகிறாரே
உங்க
அலம்பலுக்கு
அளவே
இல்லையா
என
கலாய்க்க
ஆரம்பித்துள்ளனர்
நெட்டிசன்கள்.
போகப்போக
சலிப்புத்தட்ட
ஆரம்பிக்க
இதற்கு
ஒரு
முடிவு
இல்லையா
இன்னும்
15
நாள்
இருக்கெ
எப்படி
தாங்க
போகிறோம்
என
நெட்டிசன்கள்
விமர்சிக்க
ஆரம்பித்து
விட்டனர்.

நான்
துபாய்
இளவரசன்
சார்லி
மீம்ஸ்
போட்டு
கலாய்க்கும்
நெட்டிசன்கள்
வெற்றிக்கொடி
கட்டு
படத்தில்
மனோரமாவை
ஏமாற்ற
சார்லி
மனநலன்
பாதிக்கப்பட்டவராக
நடித்து
நான்
துபாய்
இளவரசன்
என
பேசும்
வசனத்தை
போட்டு
பொன்னியின்
செல்வனை
கலாய்க்க
ஆரம்பித்துள்ளார்கள்.
இதற்கு
சிலர்
எதிர்ப்பு
தெரிவித்தாலும்
பெரும்பாலானோர்
ரசித்து
ஸ்மைலியை
போட்டு
தள்ளுகிறார்கள்.
இவர்கள்
காமெடிக்கு
அளவே
இல்லையா,
தாங்க
முடியலடா
சாமின்னு
பதிவிடுகிறார்கள்.

நல்லாத்தானே
இருக்கு
நல்லாத்தானே
போய்கிட்டிருக்கு
சிலர்
ஒரு
கல்
ஒரு
கண்ணாடி
படத்தில்
சந்தானம்
செய்யும்
சேஷ்டைகளை
போட்டு
பொன்னியின்
செல்வன்
ப்ரமோஷன்
டீம்
செய்வதை
கிண்டலடித்துள்ளனர்.
சிலர்
100
நாளில்
கோடீஸ்வரன்
ஆவது
எப்படி
என
பார்த்திபன்
வடிவேலுவை
கலாய்க்கும்
காமெடி
சீன்
காட்சியைப்போட்டு
சரியாத்தானே
இருக்கு
ஆமா
சரியாத்தானே
இருக்குன்னு
போட்டு
கலாய்க்கிறார்கள்.
ரசிகர்கள்
வரவேற்பார்கள்
என
போடப்போய்
அதுவே
மீம்
கிரியேட்டர்களுக்கு
கண்டெண்ட்
ஆகியுள்ளது.
நெட்டிசன்கள்
புலம்புவதுபோல்
இன்னும்
15
நாளில்
என்னென்ன
நடக்க
போகிறதோ?