மதுரை: பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு வாரத்தில் அமலுக்கு வர உள்ளது. போலி பத்திரம் எப்போது பதிவு செய்திருந்தாலும் ரத்து செய்யப்படும் என்றார்.
பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக ஆதாரத்துடன் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி கடனுக்கான சொத்து பிணைய உரிமைப்பத்திரத்தை ஆன்லைனில் பதியும் வசதி நாளை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.