சென்னை
:
நடிகர்
பிரித்விராஜ்
47
ஆண்டுகளுக்கும்
மேலாக
சினிமாத்துறையில்
நடித்து
வருகிறார்.
இதுவரை
200க்கும்
மேற்பட்ட
படங்களிலும்
ஏராளமான
சீரியல்களிலும்
பிரித்விராஜ்
நடித்துள்ளார்.
தற்போது
சன்
டிவியில்
ஒளிபரப்பாகிவரும்
கண்ணான
கண்ணே
சீரியலில்
நாயகியின்
அப்பாவாக
நடித்து
வருகிறார்
பிரித்வி.
நடிகர்
பிரித்விராஜ்
நடிகர்
பிரித்வி
ராஜ்,
கடந்த
47
ஆண்டுகளுக்கும்
மேலாக
சினிமாவில்
வில்லனாகவும்
துணை
கதாபாத்திரங்களிலும்
நடித்து
வருகிறார்.
இதுவரை
200க்கும்
மேற்பட்ட
படங்களில்
இவர்
நடித்துள்ளார்.
தொடர்ந்து
சின்னத்திரையிலும்
ஏராளமான
சீரியல்களிலும்
நடித்து
ரசிகர்களின்
கவனம்
பெற்றுள்ளார்.
கண்ணான
கண்ணே
தொடரில்
பிரித்வி
தற்போது
சன்
டிவியில்
ஒளிபரப்பாகிவரும்
கண்ணான
கண்ணே
சீரியலில்
நாயகி
மீராவின்
தந்தையாக
தன்னுடைய
மனைவியின்
சாவிற்கு
காரணமான
தன்னுடைய
குழந்தையை
வெறுக்கும்
கேரக்டரில்
நடித்து
வருகிறார்.
கௌதம்
என்ற
இந்தக்
கேரக்டரில்
பெரிய
பணக்காரனாக
இருந்த
பிரித்வி,
தற்போது
சூழ்நிலை
காரணமாக
ஏழையாக
மாறியுள்ளார்.
தன்னுடைய
மகனை
நேசிக்கும்
பிரித்வி
சீரியலில்
தன்னுடைய
மகளை
வெறுக்கும்
கேரக்டரில்
நடித்தாலும்
உண்மையில்
தன்னுடைய
மகனை
மிகவும்
நேசித்து
வருகிறார்
பிரித்வி.
இதற்கும்
மேல்
இவருடைய
மகன்
சிறப்பு
குழந்தையாக
உள்ளார்.
ஒரு
சிறப்பு
குழந்தையின்
பெற்றோராக
இருப்பது
அவ்வளவு
எளிதல்ல
என்றும்
சமூகத்தின்
முன்பு
பல
ஏளனங்கள்,
கண்டனங்களை
சந்திக்க
வேண்டியிருக்கும்
என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
விமானநிலையத்தில்
மோசமான
அனுபவம்
கடந்த
2007ம்
ஆண்டில்
பெங்களூரு
விமானநிலையத்தில்
தன்னுடைய
மகனை
செக்
செய்த
ஊழியர்
அவர்
என்ன
பைத்தியமா
என்று
கேட்டது
தங்களின்
இதயத்தை
ஈட்டி
போல
தாக்கியதாகவும்
தொடர்ந்து
சட்டம்
பேசியதாகவும்
தெரிவித்த
பிரித்வி,
தான்
ஆட்டிசம்
பாதித்த
குழந்தைகளின்
பெற்றோர்
உடன்
வந்தால்
அவர்கள்
விமான
பயணத்தில்
அனுமதிக்கப்படலாம்
என்று
வாதாடியது
ஊடக
கவனம்
பெற்று,
சிஎன்என்-இன்
இந்தியன்
ஆப்
தி
இயர்
விருதை
பெற்றுத்
தந்ததாகவும்
நினைவு
கூர்ந்துள்ளார்.
மாறிய
சமூகத்தின்
அணுகுமுறை
ஆனால்
தற்காலங்களில்
நிலைமை
மிகவும்
மாறியுள்ளதாகவும்,
தாங்கள்
தங்களுடைய
மகனை
விமானநிலையங்களுக்கு
அழைத்து
செல்லும்போது,
பழைய
கசப்பான
அனுபவங்களை
தற்போது
பெறுவதில்லை
என்றும்,
யாரும்
அவனைப்
பார்த்து
முகம்
சுளிப்பதில்லை
என்றும்
கூறியுள்ளார்.
ஒரு
சாதாரண
மனிதனைப்
போல
கடந்து
செல்வதாகவும்
அவர்
குறிப்பிட்டுள்ளார்.