மதுரைக்கு வண்டிய திருப்பும் ஐடி பாய்ஸ்… விஸ்வரூபம் எடுக்குப் போகும் தெற்கு!

ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும், பெங்களூருவும் தான் முதலில் நினைவில் தோன்றும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெரு நகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த ”டைடல் பார்க்” திட்டத்தை சொல்லலாம்.

சென்னை தரமணியில் கடந்த 2000ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம்பிடித்தன. இதன்மூலம் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டிய நிலைமை மாறியது. அதன்பிறகு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வந்து தடம் பதித்தன. இது தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியது.

அதேசமயம் சென்னையில் அதிகரித்து வரும் நெருக்கடியான சூழல் புதிய நிறுவனங்களை மற்ற பெரு நகரங்களை நோக்கி தள்ளியது. இந்த சூழலில் தான் கோவையில் இரண்டாவது டைடல் பார்க் கொண்டு வரப்பட்டது. வடக்கில் சென்னையிலும், மேற்கில் கோவையிலும் தலா ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தெற்கில் அப்படியான வாய்ப்புகள் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது.

இந்த இடத்தில் அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற வாசகத்தை சொல்லியே ஆக வேண்டும். ’வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பது தான் அது. தென்னிந்திய மாநிலங்களை புறந்தள்ளி விட்டு வட இந்தியாவை மட்டும் மத்திய அரசு வாழ வைப்பதாக அண்ணா குற்றம்சாட்டி இருந்தார். அதே விஷயம் தமிழகத்திற்கும் பொருந்தி போவதாக பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணாவின் வழிவந்த முதல்வர்

புதிய அத்தியாயம் படைத்துள்ளார். தென் தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன்மூலம் ’தெற்கு வாழும், வாழ வைப்போம்’ என்று ஸ்டாலின் நிரூபித்து காட்டியிருக்கிறார்.

“பசியோடு பாடம் சொல்லி கொடுக்கக் கூடாது” – முதல்வர் ஸ்டாலின் !

இனி தென் தமிழகத்தில் இருந்து கோவைக்கோ அல்லது சென்னைக்கோ அல்லது பெங்களூருவிற்கோ ஐடி நிறுவனங்களை தேடி செல்ல வேண்டியதில்லை. மதுரை மாட்டுத்தாவணிக்கு சென்றால் போதும். முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த 20, 30, 50 ஆயிரங்களாக மாறும். புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மதுரையை தேடி வரும். வேலைவாய்ப்பு பெருகும். மதுரை சென்னையை ஓரங்கட்டும் என்று கனவு காணத் தொடங்கிவிட்டனர்.

ஐடி நிறுவனங்களின் வருகையால் உள்கட்டமைப்பு வசதிகளும் தேடி வரும். குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பொழுதுபோக்கு என வசதிகள் வரிசையாக கொண்டு வரப்படும். அதன்பிறகு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மதுரை மற்றும் தென் மாவட்ட இளைஞர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும். அதேசமயம் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு பார்த்து பார்த்து செய்ய வேண்டிய தேவையிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.