மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பு! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு பதவி ஏற்றது முதல்,கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உள்ளது என ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது. அதுபோல கடந்த அதிமுக ஆட்சியின்போது 2020ம் ஆண்டு  303 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் மதுரை மண்டலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து, மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் கொடுத்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது,

மதுரை மண்டலத்தில் கடந்த  2021-ம் ஆண்டு 246 கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.  நடப்பாண்டில் (2021) ஆகஸ்டு மாதம் வரை 164 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதி பெறாத சட்டவிரோத கடைகள் எதுவும் இயங்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 303 கடைகள் திறக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பது, குற்ற நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் எண்ணிக்கை, ஒரு கடையை மட்டும் பார்க்கும் சூப்பர்வைசர், 2 கடைகளை பார்க்கும் சூப்பர்வைசர் எண்ணிக்கை, சூப்பர்வைசர் இல்லாமல் காலியாக உள்ள கடைகள் போன்ற சமூக ஆர்வலரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாது என்றும் குறிப்பிடப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.