வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்னும் நடைபயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் யாத்திரையை துவங்கினார்.
‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் செப்.,7ல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,600 கி.மீ., நடைப்பயணத்தை துவங்கிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், செப்., 10ம் தேதி தமிழகத்தை நிறைவு செய்தார். 4 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல், செப்.,11 முதல் கேரளாவில் நடைபயணத்தை தொடர்ந்தார். செப்.,14ம் தேதி வரை (8 நாட்களில்) 150 கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று (செப்.,15) ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல், இன்று மீண்டும் யாத்திரையை துவக்கினார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து நடைபயணத்தை துவங்கிய ராகுலுடன், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். அங்கிருந்து கருநாகப்பள்ளி நோக்கி யாத்திரை மேற்கொள்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement