வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமர்காண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து கூறினார். ரஷ்ய அதிபர் புடின்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உஸ்பெஸ்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று (செப்.16) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு உறவு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசினர். அப்போது விளாடிமிர்புடின் , பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
புடின் நேற்று (செப்.16) பிரதமர் மோடியிடம் கூறியது, எனது நண்பரே நீங்கள் நாளை (செப்.17) பிறந்தநாளை கொண்டாட உள்ளீர்கள். உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து. நட்பான இந்தியாவுக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். உக்ரைன் போருக்குப் பின், இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement