மின் கட்டண உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஈபிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி இன்று (செப்டம்பர் 16) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்ன பேசினாரோ, அதில் எடப்பாடி பழனிசாமி என்று இருந்ததை மாற்றி மு.க. ஸ்டாலின் என்று மாற்றி கோடிட்ட இடங்களை நிர்ப்புக்க என்பது போல எடப்பாடி பழனிசாமி யாரோ எழுதிக் கொடுத்ததை பேசிவிட்டு சென்றுள்ளார். 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், அவர்களின் ஆட்சி 32 ஆண்டுகள் இருந்தது என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார். ஏதாவது உறுப்படியாக சொல்லியிருக்கிறாரா? இத்தனை ஆண்டுகள் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும். மு.க. ஸ்டாலின் தலைமையிலான 15 மாத கால ஆட்சி அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிற ஆட்சியாக இருக்கிறது. மு.க. ஸ்டாலின் செல்கிற இடங்களில் இல்லாம மக்கள் எப்படி எம்.ஜி.ஆரை வரவேற்றார்களோ அப்படி வரவேற்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி சொத்து வரி உயர்த்தாவிட்டால் என்ன செய்யும் மத்திய சர்க்கார் என்று சொல்லியதை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். நான் தொடர்ந்த வழக்கின் எதிரொலியாகவே அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வரி சீராய்வு செய்யப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்சாரமே வேண்டாம் என பலபேர் சொல்லக்கூடிய நிலை இருந்ததை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார் .
தி.மு.க மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தவில்லை, செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சினைகளை திசை திருப்பவே எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியுள்ளார். தற்போது கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொலைக் குற்றவாளியாக இருந்தவரை மந்திரியாக்கி, கோடி கோடியாக சம்பாதித்து வைத்திருக்கிறார்.
சசிகலா என்ற அம்மையார் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருப்பாரா ? ஏழைப்பங்காளன் என்று சொல்கிறாரே. ரெய்டின்போது காட்டும் வீடுகளெல்லாம் எலிசபத் மகாராணி வீடு போல உள்ளது. நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்திருக்கிறோம். அதிமுக விவாதிக்கத் தயாரா ? பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என மோடி அரசுக்கு தீர்மானம் போட தைரியம் இருக்கிறதா?
4 தலைமை உள்ளதாக சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரனை மனதில் வைத்து 4 தலைமை என சொல்லியிருக்கிறார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் என நாங்கள் சொன்னதையே சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இதைத் தொடர்ந்தால் தெருதெருவாக தெருமுனைக் கூட்டங்களை நடத்தி பதிலளிக்கத் தி.மு.க தயங்காது. இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் மெண்டல் ஆஸ்பிடலுக்கு போக வேண்டியதுதான். 2 ஜியே பார்த்து சமாளித்து வந்தவர் ஆ. ராசா. பெரியார் சொன்னதையே ஆ. ராசா சொல்லியிருக்கிறார்.
உதயநிதி முப்பெரும் விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு, உதயநிதி சட்டமன்ற உறுப்பினர். அண்ணா பிறந்த நாள் பணிகள் உள்ளது. விருதுநகரில் நடைபெற்றது மாநாடு அல். முப்பெரும் விழா. நானே கெஞ்சிக் கேட்டதால் மேடையேறினேன். அவ்வளவு கூட்டம். வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி, ரொம்ப நாள் நிக்காது.” என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“