ரூ.1000 முதலீட்டில் தொடங்கப்பட்ட வணிகத்தின் இன்றைய ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்.. எப்படி?

சராசரி இல்லத்தரசியான ரேகா அவரது அன்றாட வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்த, தான் நேரத்தை வீணடிக்காமல் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

அப்போது அவரது கண்ணில் செய்தித் தாள் தென்படுகிறது. அதில் காளான் வளர்ப்பு தொழில் தொடங்க பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த காளான் வளர்ப்பை வீட்டிலிருந்தே செய்ய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்லியன்கணக்கில் கெட்ட செய்திகள்.. மார்க் ஜுக்கர்பெர்க்கின் தினசரி வாழ்க்கை!

முதலீடு

வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் 2013-ம் ஆண்டு ரேகா காளான் வளர்ப்பு தொழிலைத் தொடங்குகிறார். இன்று அதன் மூலம் ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் வரை வருமான ஈட்டி வருகிறார்.

பயிற்சி

பயிற்சி

முதலில் தனக்காகக் காளான் வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்ட ரேகா, இப்போது ஆயிரம் கணக்கானவர்களுக்குக் காளான் வளர்ப்புக்கான பயிற்சியையும் வழங்கி வருகிறார். காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சியை முதலில் பெற்ற ரேகா, அதனோடு நிறுத்தி விடாமல் காளான் பற்றி நன்றாக ஆய்வு செய்து பலரிடம் இருந்து அது குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறுகிறார்.

நட்டம்
 

நட்டம்

ஆரம்பக் காலத்தில் எடுத்த உடனேயே காளான் வளர்ப்பு லாபத்தை ஒன்றும் வாரி வழங்கிவிடவில்லை. ரேகாவும் நட்டம் தான் அடைந்துள்ளார். 2018-ம் ஆண்டு சிபயாவின் க்ரிஷி விக்யான் கேந்திரா மற்றும் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம், பூசா, சமஸ்திபூர் உள்ளிட்ட இடங்களிலும் காளான் வளர்ப்பு பயிற்சிக்கு சென்றுள்ளார்.

உதவி

உதவி

அங்கு ரேகாவுக்கு கிருஷி விக்யான் கேந்திராவின் விஞ்ஞானி டாக்டர் சஞ்சய் குமாரின் உதவி கிடைக்கிறது. அதன் பிறகு தான் அவருக்கு காளான் வளர்ப்பு லாபமான ஒன்றாக மாறுகிறது.

காளான் வகைகள்

காளான் வகைகள்

முதலில் சிப்பி காளான்களை மட்டும் வளர்த்து வந்த ரேகா, இப்போது 5-க்கும் மேற்பட்ட காளான் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார். இதில் பட்டன் காளான், பால் பொத்தான் காளான், ஷிடேக் காளான், ஹெரிசியம் காளான் மற்றும் நெல் வைக்கோல் காளான் ஆகியவை அடங்கும்.

ஆன்லைன் பயிற்சி

ஆன்லைன் பயிற்சி

ரேகா இப்போது காளான்களை வளர்ப்பது குறித்த வகுப்புகளை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் வழங்கி வருகிறார். இலவச ஆன்லைன் வகுப்புகள் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

ஆப்லைன் பயிற்சி

ஆப்லைன் பயிற்சி

மேலும், அவர் ஒவ்வொரு மாதமும் வீட்டுப் பயிற்சி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கிறார். 2018 முதல், ரேகா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சுமார் 1,000 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rekha A Housewife How Started Business With Rs 1000 And Now Earns Rs 4 Lakh Per Year: Success Stories

Rekha A Housewife How Started Business With Rs 1000 And Now Earns Rs 4 Lakh Per Year: Success Stories

Story first published: Friday, September 16, 2022, 17:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.