லடாக்கில் இன்று (செப்டம்பர் 16) அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அல்ச்சிக்கு (லே) வடக்கே 189 கி.மீ. வடக்கு பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 4.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியைச் சுற்றி தொடர்ந்து நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. 2020ஆம் ஆண்டு ஜூன், 2021ஆம் ஆண்டு அக்டோபர், 2022ஆம் ஆண்டு மார்ச் என தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.