வார ராசிபலன்: 16.9.2022  முதல் 22.9.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம்

லவ் என்னும் புதிய விஷயத்துல குதிப்பீங்க. டென்ஷன் தந்துக்கிட்டிருந்த சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள்  தீரும். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு  நிறைய முன்னேற்றம் உண்டு.  ஸ்டூடன்ட்ஸ் நினைச்சே பார்க்க முடியாத மார்க்ஸ் வாங்குவீங்க. வெரி குட். கங்கிராட்ஸ். குழந்தைங்களைப் பற்றிக் கவலைப்படுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. நல்ல நியூஸ் உண்டுங்க. திருமணத்துக்கு நாள் குறிச்சிருப்பாங்க. திடீர்னு ஓவர் நைட் புகழ் வந்து சேரும். லோன் கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? கொடுப்பாங்க. டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டிருந்தீங்களே..கிடைச்சாச்சு. அப்பாவுக்கு  இத்தனை நாளாய்க் காத்திருந்த நன்மைகள் கிடைக்கும். எதிலும் நிதானப் போக்கு இருக்கிறதே என்ற சலிச்சுக்காதீங்க. நல்ல ரிசல்ட் உண்டு.

ரிஷபம்

உங்க குழந்தைங்க பற்றி பயம் வேண்டாம். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க. குழந்தைங்க வயிற்றில் மில்க் வார்ப்பாங்க. செலவைக் கட்டுப்படுத்துங்க.. முக்கியமான நல்ல சுப செலவுகள் வந்துக்கிட்டே இருக்கு கியூவில். அதுக்கு ரெடியா இருங்க. நிலம் வீடு ஏதாவது வாங்குவீங்க. குழந்தைங்க திடீர்னு புத்திசாலித்தனமா ஆயிடுவாங்க. தர்ம சிந்தனை அதிகரிக்கும். சூழ்ந்திருப்பதுபோல் சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்களும் இன்னொரு பக்கம் இருக்கும், எதையும் சமாளிக்கும்  மனோதிடம் வரும். 30 வயசுக்கு  மேற்பட்டவங்கன்னா உழைப்பால் நன்மையும் நிறைய லாபமும் வரும். மம்மி உங்களுக்குவழிகாட்டி. அதை தயவு செய்து புரிஞ்சுக்குங்க. மகன் மகள் டென்ஷன் செய்ய மாட்டாங்க அப்பிடி செய்தாலும் நீங்க ஏன் டென்ஷன் ஆவறீங்க? அவங்களை சாஃப்டா டீல் செய்துடுங்க. தட்ஸ் ஆல்.

மிதுனம்

சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றி வெற்றி வெற்றி. தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப்புடிச்சு லைக் செய்வாங்க. குழந்தைங்க கிட்ட கொஞ்சம் அனுசரிக்க வேண்டியிருக்கும். சரியாயிடுவாங்க. வெயிட் பண்ணுங்க. எதை எடுத்தாலும் ஸ்லோவாப் போகுதுன்னு மூக்கால் அழாதீங்க. தாமதமானாலும் மறுக்கப்படாது. உடன் வேலை பார்ப்பவர்கள்.. உடன் படிப்பவர்களிடம் பேச்சில் கவனம்னா கவனம் அவ்ளோ கவனம் செலுத்தணும். உங்க பணிவாலும் செயல் திறமைகளாலும்  மேலதிகாரியைக் கவர்ந்திழுப்பீங்க.. அனேகமா அவங்க பெண்.. சகோதர சகோதரிங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. மம்மி வெளிநாடு செல்வாங்க. அல்லது அவங்களுக்கு வெளிநாடு சம்பந்தமான இன்கம் வரும்.

கடகம்

டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். அருமை தெரிந்து அரவணைக்கும் நபரால் மிகுந்த நன்மை உண்டு. சின்ன ஆரோக்கியப் பிரச்னைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் குடுங்க. உங்க சாதனைச் செயல் ஒன்றிற்காகப் பாராட்டு குவியும். தொழிலில் இத்தனை பெரிய முன்னேற்றம் நீங்க பார்த்து ரொம்ப நாளாகுது இல்ல? தொழில் செழிக்கும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும். எதில்தான் குறைச்சல்? என்ஜாய். சந்தோஷமான விஷயங்களுக்காக அலையவே நேரம் சரியா இருக்கும். ஆமாங்க. யெஸ்.. வீட்டில் பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத் திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்கு மேரேஜ் ஆகும். வெளிநாட்டில் உள்ள ஃப்ரெண்ட் ஒருத்தரால நன்மை ஏற்படும். எதை எடுத்தாலும் ஒரு முறைக்கு இரு முறை அலைஞ்சுதான் முடிக்க வேண்டியிருக்கும். இட்ஸ் ஓகே.

சிம்மம்

ஃபாரின் போக ஆசைப்பட்டீங்களே. தயார் நிலையில் இருங்க. உடனே வாய்ப்பு வரும். குட் லக். கங்கிராஜுலேஷன்ஸ்.. பசுமையான சூழல் இருக்கும் ஏரியாவில் அழகான வீடு வாங்குவீங்க. . கார் வாங்கப் போறீங்க. நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு ஒவ்வொண்ணாத் தேடிக்கிட்டு வரும். மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு அல்லது அவங்க விரும்பிய நகைங்க வரும். கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிடுங்க. அம்மாவுக்குச் சில நன்மைகள் நடக்கும். அதற்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்க. எனவே அவங்க முகம் மலரும். அதைப் பார்த்து ஹாப்பியா ஆயிடுவீங்க.

கன்னி

உங்க ஹஸ்பெண்டுக்கு/ ஒஃப்புக்கு குட் நியூஸ் வரும். அதுக்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்கதானே?  யார் கூடவும் வாக்குவாதம் செய்ய வேணாங்க. அப்புறம் “சே இப்டி பேசிட்டேனே” என்று உங்களை நீங்களே குற்றம் சொல்லவும் வேண்டாம். உங்க குடும்பத்துல நிச்சயம் தோரணம் உண்டு. டாடிக்கு இத்தனை காலமா எறும்புக்கடி கணக்கா இருந்துக்கிட்டிருந்த சின்ன பிரச்சினைகள் காணாமல்  போகும். அவர் இத்தனை காலமா எதிர்பார்த்திருக்காத அளவுக்கு, சிம்பிளாய்ச் சரியாகும். மனசுல நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் மேம்பட்டு அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து மட்டுமின்றி எதிர்பாராத திக்குகளிலிருந்தும் பண வரவு/ உதவி கிடைக்கும்.  பணத்தை சேமிக்க வாய்ப்பு வரும். பேச்சில் கொஞ்சம்  கேர்ஃபுல்லா இருந்துட்டீங்கன்னா போதும். யூ வில் வின்.

துலாம்

வாகனம் வாங்குவீங்க. மாணவர்கள் படிப்பில் ஜமாய்ப்பீங்க. உங்களுக்கு / குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும்.  கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். உங்கள் பேச்சில் இருக்கும் இனிமையும் மென்மையும் உண்மையும் எல்லா இடங்களிலும் பாராட்டு வாங்கித்தரும். நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. … உங்களுக்குப் படிப்பில் அக்கறை பிளஸ்ஸாகும். அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். பொறுமைக்குப் பலன் உண்டு. கணவரோட/ மனைவியோட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. அவங்க பொறுமை இழந்தாலும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்குங்க. வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது பத்து மடங்கு யோசிச்சு பேசுங்க மிக மிக ஜாக்கிரதையாப் பேசணும். டிராவல் செய்யும்போது உங்க பொருட்களை கேர்ஃ              புல்லா வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 18 வரை 

விருச்சிகம்

ஆபீஸ் வேலைங்கள்ல பிசியாயிடுவீங்க. நண்பர்கள் நல்ல அட்வைஸர்களா இருப்பாங்க.. திடீர்னு எதிர்பார்க்காத இடங்களிலிருந்து பணம் வரும். வேலை பார்க்கும் இடத்தில் உங்க மதிப்பு பிளேன் டேக் ஆஃப் ஆனதுபோல உயரும்.  குடும்பத்துல உள்ளவங்க கிளம்பி வெளிநாடு செல்வார்கள். நண்பர்கள் உறவினர்களால நன்மையும் லாபமும் ஓரளவுக்கு வரும். பேச்சில் ஆத்திர நெடி அடிக்காமல் பார்த்துக்குங்க. இல்லாட்டி பிற்காலத்தில் உங்களுக்கே பாதிப்பு வரும். செலவுகள் இப்போதைக்கு  வேண்டாம். பிறகு செய்ங்க. இப்போது வேறு சில முக்கியமான நல்ல செலவுகள் காத்துக்கிட்டிருக்கு. அதுக்கு ரெடியாவுங்க. எதுவுமே திட்டமிட்ட வேகத்துல நடக்காது. ஸோ வாட்? நல்லபடியா முடியும் என்பது நல்ல செய்திதானே? எதையும் ஒரு முறைக்கு இரு முறை அலைஞ்சுதான் முடிக்க வேண்டியிருக்கும். அது பெரிய சிரமமா உணர மாட்டீங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை 

தனுசு

உங்க டாடிக்கு உங்களால் நல்ல விஷயம் ஒண்ணு நடக்கும். அல்லது அவரைப் பெருமிதப்படுத்துவீங்க. குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுத்துவாங்க. நீங்க கலைத்துறையில் உள்ளவர் என்றால்  மேலும் உழைத்து முன்னேறிக் கொழிக்கப் போறீங்க பாருங்களேன். லேடீஸின் கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை உயர்த்தி மத்தவங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். பல காலம் இருந்துக்கிட்டிருந்த கஷ்டங்கள் காணாமல் போகும். உங்க புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் அலுவலகத்திலும், குடும்பத்திலும் நன்மைகள் ஏற்படும். கணவருக்கு/ மனைவிக்கு வர வேண்டிய நன்மைகள் சற்று நிதானப்போக்கில் வரும். நண்பர்கள் உறவினர்களுடன் உள்ள மனத்தாபம் தீரும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 23 வரை 

மகரம்

கஷ்டங்களையெல்லாம் தாண்டி வந்தாச்சு. நல்ல நேரம் கூப்பிட்ட தொலைவில் இருக்கு. குழந்தைங்க  பரிசுகள் வாங்கி உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க. பொது இடங்களில் யாரோடும் எக்காரணம் கொண்டும் சண்டை வேணாம். சில விஷயங்களில் தடைகளும் தாமதங்களும் இருந்தாலும் நிதானப்போக்கு இருந்தாலும் நல்லபடியா முடிஞ்சுடும். நல்ல நியூஸ்கள் காத்துக்கிட்டிருக்கு. எல்லாமே கொஞ்சம் மெதுவாய்த்தான் நகரும். ஒங்களோட கவரும் தன்மை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டு. அலுவலகத்தில் நீங்க உழைச்ச உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் தவிர அதிகப்படியா வரும். தவறு செய்வோரைக் கண்டிக்கும்போது கடுமை காட்ட வேண்டாம். மென்மையாக அறிவுறுத்துங்கள். ஆபீசில் யார் கிட்டேயும் எந்த ரகசியத்தையும் பகிர்ந்துக்க வேணாம்.

கும்பம்

ஆரோக்யத்தை அலட்சியம் செய்யாம டாக்டரிடம்  போங்க. . சகோதரர்களோட ஃபைட் பண்ணாதீங்க. தன் ஆரோக்யத்தை அம்மாதான் அலட்சியம் செய்கிறார்னா நீங்களுமா அதை அனுமதிப்பீங்க? வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய தொகையெல்லாம் டாண் டாண் என்று வரப்போவதாக உறுதி கிடைக்கும். கவர்மென்ட் உத்யோகம் வேணும்னு ரொம்ப காலமாய்க் கனவு கண்டீங்களே. இப்ப கிடைச்சாச்சு பார்த்தீங்களா?  வெளிநாட்டு வருமானமும் லாபமும் உங்க விலாசத்தை விசாரிச்சுகிட்டு வரும். கோபம் வந்தால் அதைத் தூக்கி அரபிக்கடலில் போடுங்க. விதம் விதமான செலவுங்க வரும். சமாளிப்பீங்க. ஆனாலும் அலுத்துக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. அபபாவுக்கு உங்களாலும் உங்களுக்கு அவராலும் நன்மைகள் உறுதி. பல நாட்கள் சந்திக்காத ஒருவரைச் சந்திப்பீர்கள். அந்தச் சந்திப்பு மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும்.

மீனம்

குடும்பத்தில் ஒரு நல்ல விஷயமும் நடக்கமாட்டேங்குதே என்று சலித்துப் போயிருந்தீங்க. இனி வரிசையாய்ச் சுப நிகழ்ச்சிகள்தான். தொட்டதெல்லாம் துலங்கும். வாகனம் வாங்கப் போறீங்க. நல்லவங்களை நம்புங்க.. கெட்டவங்களை சந்தேகியுங்க. நீங்க அப்டியே ஆப்போசிட்டா இருக்கீங்களே. நீங்க ஹலோன்னு சொன்னாலும் “கிண்டலா” ன்னுவாங்க. எனவே கவனமாய்ப் பேசுங்க. எதிர்பாலின நட்பு சந்தோஷம் தரும். நன்மையும் தரும். ஆரோக்யத்தைக் கண் மாதிரி கவனிச்சுக்குங்க. திடீரென்று தோன்றி சின்சியரா உழைப்பதன் பலன் உங்களை வாழ்வில் உயரச் செய்வது உறுதி. எப்பவும் இதே மாதிரி உழையுங்களேன். நீங்கள் எல்லோரையும் டக் டக்கென்று அட்ராக்ட் செய்வீங்க. பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனத்தைத் தூவி அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்வீங்க.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.