விஜய் படத்தின் காபியா வெந்து தணிந்தது காடு திரைப்படம்

நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அந்த படத்துக்கு அடுத்தபடியாக வெளியாகும் படம் என்பதால் சிம்புவுக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நடிப்பில் பூர்த்தி செய்திருக்கிறார் சிம்பு.

படத்திற்காக 10 கிலோவுக்கும் மேல் எடை குறைத்து, கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நாயகி சித்தி இத்னானி நடித்துள்ளார். படத்திற்கான விமர்சனங்கள் கலவையாகவே வந்திருக்கின்றன. மும்பை கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டிருப்பதால், அந்தளவுக்கு இல்லை என ஒரு சிலர் கூற, படம் நன்றாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்திற்கு இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. படத்தின் கதை விஜய் படத்தின் கதை என நெட்டிசன்கள் கிளப்பிவிட்டுள்ளனர். 

தளபதி விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படம் பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் குடும்பத்துக்காக மும்பை செல்லும் விஜய், அங்கு அடியாளாக சேர்கிறார். பின்னர், காதலில் விழுந்து அந்த அடிதடியில் இருந்து வெளியேற நினைக்கிறார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகளை கை கொடுத்ததா? காதலியை தமிழகத்துக்கு அழைத்து வந்தாரா? என்பதே அப்படத்தின் சுவாரஸ்யமான கதை. இப்போது வெந்து தணிந்தது காடு படமும் இதே கதையை ஒத்ததாக இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். காபி அடித்து எடுத்த படத்தை ஏன் கொண்டாடுகிறீர்கள் என சிலர் கேட்க, சிம்பு ரசிகர்கள் கொதித்தெழுந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.