டெல்லி: சமூக வலைதளங்களில் இன்றைய காலகட்டத்தில் பல வினோத வீடியோக்களை பார்க்கிறோம். குறிப்பாக சமீபத்திய காலமாக உணவு டெலிவரி ஊழியர்கள் பற்றிய பல வீடியோக்களை பார்த்திருக்கலாம்.
அது டெலிவரி ஊழியர்கள் எந்தளவுக்கு பணிபுரிகிறார்கள் என்பதை நம் கண் முன்னே நிறுத்துகிறது.
அப்படி தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
இரவிலும் இனி ஹோம் டெலிவரி.. சென்னை, பெங்களுருக்கு வரும் புதிய சேவை..!
டன்சோ ஊழியரின் பாராட்டதக்க செயல்
டன்சோ ஊழியர் ஒருவர் ரயில்வே பிளார்ட்பார்மில் ஒடிச் சென்று, ரயிலில் உள்ள பயணி ஒருவருக்கு பார்சல் ஒன்றை டெலிவரி செய்யும் காட்சியை பார்க்க முடிகிறது. அதில் அந்த பயணி உள்ள ரயில் மெதுவாக செல்லத் தொடங்கிய நிலையில், டன்சோ ஊழியர் ரயிலில் பின்னாலே ஒடுவதையும் பார்க்க முடிகிறது. இதனை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெலிவரியை சரியாக செய்யணுமே?
இதனை பல ஆயிரம் பேர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். டெலிவரி ஊழியர் தன்னால் முடிந்த மட்டில் அந்த டெலிவரியை சரியாக செய்ய, ஓடியதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் நினைத்திருந்தால் அந்த ஆர்டரை சரியாக வழங்க முடியாமல் கூட போயிருக்கலாம். ஆனால் டெலிவரி ஊழியர் அந்த பார்சலை எப்படியேனும் ஒப்படைத்து விட வேண்டும் என ஓடுவது, உண்மையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பயனர்களின் கமண்ட்டுகள்
பலரும் அந்த ஊழியருக்கு புரோமோஷன் கொடுங்கள் என கூறிவருகின்றனர். சிலர் இதனை டன்சோ மார்கெட்டிங் புரோமோ வீடியோவாக பயன்படுத்தலாம் என கூறி வருகின்றனர்.
சில பயனர்கள் இது மார்கெட்டிங் யுக்தி என்றும் கூறியுள்ளனர். பலரும் அந்த ஊழியருக்கு பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.
பாராட்டுகள்
எது எப்படியோ தனது வேலையை சரியான நேரத்தில் சரியாக செய்ய வேண்டும் என நினைத்த அந்த ஊழியருக்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோமே.
சமீபத்திய காலமாக ஆன்லைன் ஆப் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இடையே கடும் போட்டிகள் உருவாகி வருகின்றன. எனினும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் டெலிவரி ஊழியர்களின் பாராட்டத்தக்கவையாக உள்ளன.
கேரளா நிகழ்வு
சமீப மாதங்களுக்கு முன்னதாக இரவில் உணவு டெலிவரிக்காக சென்ற ஊழியர் ஒருவர், கடும் மழையும் பொருட்படுத்தாது, காய்ச்சலில் தவித்த குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த சம்பவம் கேராளவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Dunzo employee made a delivery to a user on a departing train
Dunzo employee is seen running into a railway platform and delivering a parcel to a passenger on the train.