இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,400-க்கும் அதிகமானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் பெய்த இந்த மழைக்கு, அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மறுபுறம் அந்நாட்டில் மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டித்தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1400 பேர் பலி
மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியதோடு ஏராளமான பாதிப்புகளும் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகினர். குறிப்பாக இந்த கனமழையால் பாகிஸ்தானில் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழ்நததாக அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு
இந்த நிலையில், பாகிஸ்தானில் 3 கோடி மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்ட பெருமழைக்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக பருவமழை மாற்றத்தின் பங்கு எந்த பெருமழைக்கு எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என்பதை உறுதி செய்ய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மனித சமூகத்தின் நடவடிக்கைககளால் ஏற்பட்ட பருவநிலை மாறுபாட்டால் பூமியின் வெப்பம் தற்போது 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
1.2 டிகிரி செல்சியஸ் வெப்பம்
தொழிற்சாலைகள் கழிவுகள் மற்றும் அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் காரணமாக பூமியின் வெப்பம் உயர்வதற்கு முக்கிய காரணியாகும். விஞ்ஞானிகள் புவியின் வெப்பம் தற்போது உள்ளதை விட 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக இருந்த சமயத்தில் உள்ள தரவுகளை வைத்து ஒப்பிட்டு விஞ்ஞானிகள் இந்த பெருமழைக்கு பருவநிலை மாற்றத்தின் பங்களிப்பு எந்த அளவு இருந்ததை என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
பருவ நிலை மாற்றமே காரணம்
அதில், ”பாகிஸ்தானின் சிந்த் மற்றும் பலோசிஸ்தான் மாகாணத்தில் பெய்த மழையில் 5 நாட்கள் அதாவது 50 சதவீதம் மழைக்கு இந்த பருவ நிலை மாற்றமே முக்கிய காரணியாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். மனிதனின் நடவடிக்கைகளால் அதிகரித்துள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறைவாக இருந்திருந்தால் இதேபோன்ற நிகழ்வு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. பாதிப்பு குறைவாகவே இருந்திருக்கும்” என்றனர்.
பெரிய அளவில் மாற்றம்
அதேவேளையில், வரலாற்று ரீதியாக பார்க்கும் போது பாகிஸ்தானில் பருவமழை சீசனில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், 60 நாள் மழைப்பொழிவு காலத்தில் மனிதசமூகம் ஏற்படுத்திய வெப்பமயாமதம் மட்டுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து இருக்கும் என்ற முடிவுக்கும் நாம் உறுதியாக வர முடியாது எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.