வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் காதில் இருந்த ஹெட்போன் கீழே விழுந்தது. அதனை மாட்ட ஷெரீப் தடுமாறிய நிலையில் உதவியாளரை வந்து அதனை சரியாக மாட்டினார். இதனை பார்த்து கொண்டிருந்த புடின் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்தியவர் ஒரு கட்டத்தில் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்து பாகிஸ்தானியர்கள், அவர்கள் பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க அந்த அமைப்பில் இடம்பெற்ற நாட்டு தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். மாநாட்டிற்கு முன்னதாக, ரஷ்ய அதிபர் புடினை, பாக்., பிரதமர் ஷெபாஷ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக, ஷெபாஷ் ஷெரீப் காதில் இருந்த ஹெட்போன் திடீரென கழன்று விழுந்தது. அதனை பார்த்த ஷெரீப், ஹெட்போனை மாட்ட முயற்சித்தார். ஆனால், எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அருகிலிருந்த உதவியாளரை அழைத்தார். அங்கிருந்த வந்த ஒருவர், ஹெட்போனை பொருத்திவிட்டு சென்றார். ஆனால், மீண்டும் ஓரிரு நொடிகளில் அந்த ஹெட்போன் மீண்டும் கீழே விழுந்தது. இதனை பார்த்து கொண்டிருந்த புடின் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்தி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் புடின் சிரித்து விட்டார். இதுவும் மைக்கில் கேட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பாகிஸ்தானில் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டு நெட்டீசன்கள் கடுமையாக பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.
பணத்திற்காக பிச்சையா? பிரதமர் கவலை
இதனிடையே, பாகிஸ்தானில் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் ஷெபாஷ் ஷெரீப் பேசியதாவது: இன்று நட்பு நாடுகளுக்கு சென்றாலோ, அல்லது தொலைபேசியில் அழைத்தாலோ, அவர்களிடம் பணத்திற்காக பிச்சையெடுக்க வருவதாக நினைக்கின்றனர். இன்று சிறிய பொருளாதார நாடுகள் கூட பாகிஸ்தானை முந்தியுள்ளன. ஆனால், நாம் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து திரிந்து வருகிறோம்.
வெள்ளத்திற்கு முன்பு கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்த பாகிஸ்தான், வெள்ளத்திற்கு பின்பு இன்னும் சிக்கலாக்கி உள்ளது. பதவியேற்ற போது, பொருளாதார ரீதியில் திவாலாகும் நிலையில் நாடு இருந்தது. ஆனால் கூட்டணி ஆட்சி கடுமையாக உழைத்து அதில் இருந்து நாட்டை மீட்டுள்ளது.
பொருளாதார நிலையற்ற தன்மையை கட்டுக்குள் வந்துள்ளோம். இம்ரான் கானால், நாட்டில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அவர்கள், சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால், தற்போது கடுமையான சவாலை சந்தித்து வருகிறோம். இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement