இந்திய பங்கு சந்தையானது இன்றைய அமர்வின் பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இது 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவாகும்.
நிஃப்டி 2% கீழாக முடிவடைந்து 17,530 என்ற லெவலுக்கு கீழாக முடிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகளில் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!
3வது நாளாக சரிவில் சந்தை
குறிப்பாக அமெரிக்காவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் 7.8%ல் இருந்து, 7% ஆக வளர்ச்சி குறையலாம் என மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையானது மூன்றாவது நாளாக சரிவில் காணப்படுகிறது
NSE- டாப் கெயினர்கள் யார்?
நிஃப்டி குறியீட்டில் இந்தஸ்இந்த் வங்கி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், டாடா கன்சியூமர் டியூரபிள் புராடக்ஸ், டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
BSE- டாப் கெயினர்கள் யார்?
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி டாப் கெயினராகவும், யுபிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், எம் & எம், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
இதுவும் ஒரு காரணம்?
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் இன்று வார கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய சந்தையிலும் புராபிட் புக்கிங் காரணமாகவும் சந்தையில் செல்லிங் அழுத்தம் காணப்பட்டது.
bloodbath on Dalal street: Today top losers and gainers
Who are the top gainers and top losers amid today’s stock market crash?