டெல்லி:
200
கோடி
ரூபாய்
மோசடி
உட்பட
மேலும்
10
மோசடி
வழக்குகளில்
தொடர்புடையவர்
சுகேஷ்
சந்திரசேகர்.
மோசடி
வழக்குகளில்
கைது
செய்யப்பட்டுள்ள
சுகேஷ்
சந்திரசேகர்
திகார்
சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
சுகேஷ்
சந்திராவுடன்
பாலிவுட்
நடிகை
ஜாக்குலின்
பெர்னாண்டஸுக்கு
தொடர்பு
இருப்பதாக
கூறப்பட்ட
நிலையில்,
மேலும்
4
நடிகைகள்
இதில்
சிக்கியுள்ளனர்.
திடுக்கிட
வைத்த
200
கோடி
மோசடி
சில
ஆண்டுகளுக்கு
முன்
தேர்தல்
கமிஷனால்
முடக்கப்பட்ட
அதிமுகவின்
இரட்டை
இலை
சின்னத்தை
பெறுவதற்கு
லஞ்சம்
கொடுத்ததாக
கூறப்பட்டது.
இந்த
வழக்கில்
பெங்களூருவைச்
சேர்ந்த
இடைத்தரகர்
சுகேஷ்
சந்திரசேகர்
கைது
செய்யப்பட்டார்.
இவர்
மீது
பல
மோசடி
வழக்குகள்
இருந்ததையடுத்து,
அவர்
டெல்லி
திகார்
சிறையில்
அடைக்கப்பட்டார்.
சிறையில்
இருக்கும்போது
தொழிலதிபர்
ஒருவருக்கு
ஜாமீன்
எடுத்து
தருவதாகக்
கூறி,
அவரது
மனைவியிடம்
200
கோடி
ரூபாய்
மோசடி
செய்ததாக
கூறப்படுகிறது.
நடிகை
ஜாக்குலின்
பெர்னாண்டஸுக்கு
தொடர்பு
இதில்
சுகேஷ்
சந்திரசேகரின்
மனைவி
லீனா
மரியபால்,
உதவியாளர்
பிங்கி
இரானி
உள்ளிட்டோரும்
கைதாகினர்.
மோசடி
பணத்தில்
சுகேஷ்
சந்திரசேகர்
சிறையில்
சொகுசு
வாழ்க்கை
வாழ்ந்ததும்
தெரியவந்தது.
மேலும்,
பிரபல
ஜாக்குலின்
பெர்னாண்டஸ்
உள்பட
மேலும்
பல
பாலிவுட்
நடிகைகளுடன்,
தன்
உதவியாளர்
பிங்கி
இரானி
மூலம்
பழக்கத்தை
ஏற்படுத்திக்கொண்ட
சுகேஷ்,
அவர்களுக்கு
விலையுயர்ந்த
பரிசுப்
பொருட்களைக்
கொடுத்து
உல்லாச
வாழ்க்கை
வாழ்ந்ததாகக்
கூறப்படுகிறது.
இந்த
செய்தி
பாலிவுட்டையே
அதிர
வைத்தது.
ஜாக்குலின்
பெர்ணாண்டஸிடம்
போலீஸார்
விசாரணை
இந்த
சம்பவம்
தொடர்பாக
பல்வேறுகட்ட
விசாரணைகள்
நடைபெற்றுள்ள
நிலையில்,
மீண்டும்
ஜாக்குலின்
பெர்னாண்டசிடம்
நேற்று
முன்தினம்
8
மணி
நேரத்துக்கும்
மேலாக
விசாரணை
நடத்தப்பட்டது.
அதேபோல்
பிங்கி
இரானியிடமும்
விசாரணை
நடத்தப்பட்டுள்ளது.
இருவரது
வாக்குமூலங்களிலும்
முரண்பாடுகள்
இருப்பதால்,
பிங்கி
இரானியை
போலீசார்
மீண்டும்
விசாரணைக்கு
அழைத்தனர்.
ஜாக்குலின்
பெர்னாண்டசை
தேவைப்பட்டால்
அழைப்பதாகவும்,
அதுவரை
டெல்லியிலேயே
தங்கியிருக்க
வேண்டும்
என்றும்
அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்
4
பாலிவுட்
நடிகைகளுக்கு
தொடர்பு
பிங்கி
இரானி
மட்டுமின்றி,
வழக்கில்
தொடர்புடைய
மற்றொரு
நடிகையான
நோரா
பதேகியிடமும்
விசாரணை
நடத்தப்பட்டுள்ளது.
அப்போது
சுகேஷ்
சந்திரசேகரின்
குற்றச்செயல்கள்
பற்றி
எனக்கு
எதுவும்
தனக்கு
தெரியாது
என
நோரா
பதேகி
கூறியுள்ளார்.
மேலும்,
நிகிதா
தம்போலி,
சாகத்
கன்னா,
சோபியா
சிங்,
அருஷா
பாட்டீல்
ஆகிய
மேலும்
4
நடிகைகளுக்கும்
இந்த
வழக்கில்
தொடர்பு
இருப்பதாகக்
கூறப்படுகிறது.
இவர்கள்
ஒவ்வொருவரிடமும்
சுகேஷ்
சந்திரசேகரை
பற்றி
பிங்கி
இரானி
ஒவ்வொரு
விதமாக
கூறியிருக்கிறார்.
நிகிதா
தம்போலியிடம்
தென்னிந்திய
சினிமா
தயாரிப்பாளர்
சேகர்
என்றும்,
சோபியா
சிங்கிடம்
சினிமா
தயாரிப்பாளர்
சேகர்
ரெட்டி
என்றும்,
அருஷாவிடம்
வேறு
பெயரையும்
தெரிவித்துள்ளார்.
தமிழ்த்
தொலைக்காட்சியின்
உரிமையாளர்?
சாகத்
கன்னாவிடம்
சுகேஷ்
சந்திரசேகர
ரெட்டி
என்றும்,
அவர்
பிரபல
தமிழ்த்
தொலைக்காட்சி
ஒன்றின்
உரிமையாளர்
எனவும்
தெரிவித்துள்ளார்.
பின்னர்
சாகத்
கன்னா,
சுகேஷ்
சந்திரசேகருடன்
பழகும்போது,
சுகேஷ்
சந்திரசேகர்
தன்னை
தமிழக
முன்னாள்
முதலமைச்சர்
ஒருவரின்
உறவினர்
என்று
சொல்லியிருப்பதாகத்
தெரிகிறது.
இந்தத்
தகவல்கள்
எல்லாம்
அமலாக்கப்பிரிவு
தாக்கல்
செய்த
குற்றப்பத்திரிகையில்
உள்ளன.
மேலும்,
அவர்கள்
அனைவரும்
சுகேஷ்
சந்திரசேகரை
தனியாக
சிறையில்
சென்று
சந்தித்துள்ளனர்.
அப்போது
பல
லட்சம்
ரூபாயை
சுகேஷ்
சந்திரசேகரிடம்
இருந்து
அவர்கள்
பெற்றதாகவும்,
இதில்
பிங்கி
இரானிக்கும்
சில
லட்சங்கள்
கிடைத்ததாகக்
கூறப்படுகிறது.
மேலும்
4
பாலிவுட்
நடிகைகளுக்கும்
விலையுயர்ந்த
வாட்ச்
போன்ற
பரிசுப்
பொருட்களை
சுகேஷ்
வழங்கியதாகவும்
தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால்
இந்த
வழக்கு
தற்போது
மீண்டும்
சூடு
பிடித்துள்ளது.