4 ஏலக்காய், அரை ஸ்பூன் பசு நெய்.. வறட்டு இருமல் சரியாக இப்படி சாப்பிடுங்க

சளி அல்லாத வறட்டு இருமல் மிகவும் தொந்தரவாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒவ்வாமை அல்லது எரிச்சல் காரணமாக வறட்டு இருமல் ஏற்படலாம்.

எனவே, நிவாரணத்திற்காக, பலர் நீராவி பிடிப்பது, கஷாயம் குடிப்பது போன்ற வைத்தியங்களை முயற்சிக்கின்றனர். வறட்டு இருமலை உடனடி குணமாக்கும் எளிய ஆயுர்வேத வைத்தியம் இங்கே உள்ளது.

வறட்டு இருமல் மிகவும் எரிச்சலூட்டும், நீங்கள் தூங்கக்கூட முடியாது. மேலும் நீங்கள் தூங்க முயற்சிக்கும் போதெல்லாம் அது மோசமாகிவிடும். நீங்கள் எதை முயற்சி செய்தாலும் அது மேலும் அதிகரிக்கும்.

வறட்டு இருமல் சரியாக, மஞ்சள், தேன், துளசி போன்றவற்றை முயற்சிக்க வேண்டாம். இவை, சளி, இருமலுக்கானவை. வறட்டு இருமலில், இந்த அனைத்து பொருட்களும் வேலை செய்யாது, மாறாக இவை வறட்டு இருமலை அதிகரிக்கலாம்.

வறட்டு இருமலுக்கு நீங்கள் என்ன செய்யலாம்?

வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் மற்றும் உப்பு கலந்து, மார்பு மற்றும் கழுத்து பகுதியில் தடவலாம்.

நான்கு ஏலக்காயை அரை ஸ்பூன் கற்கண்டு மற்றும் அரை ஸ்பூன் வெதுவெதுப்பான பசு நெய்யுடன் ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

இருப்பினும், நாள்பட்ட வறட்டு இருமலை குணப்படுத்த முறையான சிகிச்சை தேவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.