Redmi Note 11T Pro: மீண்டும் வெடித்து சிதறிய ரெட்மி மொபைல், MI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஸ்மார்ட்போன்கள் பல அவ்வப்போது வெடித்துச்சிதரும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் அடிக்கடி நிகழ்கின்றன. அதிலும் குறிப்பாக சீன ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் முறை வெடித்து சிதறியுள்ளன.

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் வாடிகையாளர்கள் சீன மொபைல் என்றால் சற்று கவனமுடன் வாங்குகின்றனர். இதிலும் Redmi போன்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் அடிக்கடி சிக்குகின்றன. Redmi என்பது Mi நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாக உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றது.

Smart phone protection: ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

அதில் சமீபத்தில் சீனாவில் Redmi Note 11T Pro ஒன்று வெடித்து சிதறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வைரல் வீடியோவில் ரெட்மி நோட் 11T ப்ரோ ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் காணப்படுகிறது. அதன் டிஸ்பிலே முழுவதும் வெடித்த சிதறி உள்ளது.

இந்த வெடிப்பு அந்த மொபைல் பின்பக்கம் அமைந்துள்ள பேட்டரி மூலம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதன் பேக் பேனல் அதன் ஸ்க்ரீன் இடம் இருந்து தனியாக பிரிந்து அதன் பேட்டரி வெளியே வந்துவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பேட்டரி மூலம் ஸ்மார்ட்போன் தீ பிடித்து எரிந்து இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய உண்மை காரணம் விரைவில் வெளியாகும்.

இதே போல சாம்சங் நிறுவனத்தின் Note 8 series போன்களும் சில ஆண்டுகளுக்கு முன்னாள் தொடர்ச்சியாக வெடித்து சிதறின. இதற்கு உற்பத்தி குறைபாடு காரணம் என்று கூறி சாம்சங் நிறுவனம் அது விற்பனை செய்த அனைத்து போன்களையும் திரும்பப்பெற்று வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தது.

Mobile Explosion : வெடிகுண்டை போல மொபைல் போன் வெடிக்க காரணம் என்ன?

சீனாவின் பிரபல Oneplus நிறுவனத்தின் Nord 2 Series போன்களும் இதேபோல வெடிப்பு சர்ச்சையில் சிக்கியது. ஸ்மார்ட்போன்களை அதன் திறன் மற்றும் தரத்திற்கு மீறி பயன்படுத்தினால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களின் திறனுக்கு ஏற்றார் போல அதன் தரமும் உள்ளே பயன்படுத்தப்படும் பாகங்களும் இருக்கவேண்டும். உற்பத்தி செலவை குறைக்க தரம் குறைந்த பாகங்கள் பயன்படுத்துவதால் இதுபோன்ற வெடிப்பு நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

Mobile Explosion: மொபைல் வெடித்து 8 மாத குழந்தை பலி

ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பொறுத்தவரை அவர்கள் வழக்கம் போல வாடிக்கையாளர் வேறு சார்ஜ்ர் பயன்படுத்தியது அல்லது போன் டேமேஜ் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று காரணம் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.6 இன்ச் ஸ்க்ரீன், 144HZ ரெசோலியூஷன், 8 GB RAM, Mediatek Dimensity 8100 Chipset, 5,080Mah பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் கொண்டுள்ளது.

All Credits: www.piyushbhasarkar/twitter.com

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.