Saturn vs Science: சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்

சனி கிரகத்தில் வாயு மிக அதிக அளவில் இருப்பதால் அது வாயு கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 26.7 டிகிரி சாய்வாக உள்ளது மற்றும் டைட்டன் எனப்படும் அதன் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்று கிரகத்தை விட்டு நகர்கிறது என்று அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, சனியின் வளையங்கள் எவ்வாறு உருவானது என்பதை வெளிப்படுத்துகிறது. 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பனிக்கட்டி நிலவு (கிறிசாலிஸ் என்று பெயரிடப்பட்ட நிலவு) சனி கிரகத்திற்கு சற்று நெருக்கமாக வந்தபோது உடைந்துபோனது. கிறிசாலிஸ் நிலவு பனிக்கட்டி துண்டுகளாக உடைந்தன, அவை கிரகத்தின் வளையங்களை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் இந்த வளையங்களில் பெரும்பாலானவை சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியும் எம்ஐடியின் கிரக அறிவியல் பேராசிரியர் ஜாக் விஸ்டம் இந்த நம்பத்தகுந்த விளக்கத்தைக் கண்டறிந்திருப்பது திருப்தி அளிப்பதாக கூறுகிறார். உண்மையில், எண்னற்ற ரகசியங்களை தன்னுள் பொதித்து வைத்துள்ள பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுகள் ஆச்சரியம் அளித்தாலும், அவற்றைஅறிந்துக் கொள்வதும், அதற்கு விளக்கம் கொடுக்க முடிவதும் மகிழ்ச்சி அளிப்பது ஆகும்.

மேலும் படிக்க | சூரியனின் மேற்பரப்பா இது? வியக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்த சோலார் டெலஸ்கோப்

சூரிய குடும்பத்தின் உள்ள கிரகங்களில், சனி கோளானது நான்கரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, ஆனால் அதன் வளையங்கள் தோராயமாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது.

2004 முதல் 2017 வரை சனியைச் சுற்றி வந்த பிறகு, காசினி ஆய்வு இதே போன்ற அவதானிப்புகளை வெளியிட்டாலும், அவற்றை சமீபத்திய ஆய்வுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அதேபோல, சனி கிரகத்தின் மற்றொரு குணாதிசயத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவியாக உள்ளது. அறிவியல் ஆய்வாளர்கள், சிக்கலான கணித மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் சனி கிரகத்தின் வளையங்கள் தொடர்பான விளக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?

சனி கிரகத்தில் வாயு மிக அதிக அளவில் இருப்பதால் அது வாயு கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 26.7 டிகிரி சாய்வாக உள்ளது மற்றும் டைட்டன் எனப்படும் அதன் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்று கிரகத்தை விட்டு நகர்வது தெரியவந்துள்ளது. 

இது, சனியின் அச்சு செங்குத்துச் சுழற்சியின் வீதத்தை பாதிக்கும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர். “resonance” என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையை உருவாக்கி, நெப்டியூனின் சுற்றுப்பாதையுடன் ஒத்திசைக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கோளின் வளையங்கள் தோன்றுவதை, கூட்டிலிருந்து வெளிவரும் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் விஞ்ஞானிகள், கிறிசாலிஸ் தொடர்பான பல ரகசியங்களையும் கண்டறிந்துள்ளனர்.  

மேலும் படிக்க | அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.