நீட் தேர்வில் தனக்கு குறைவான மதிப்பெண் போடப்பட்டுள்ளதாக மாணவி தொடர்ந்த வழக்கில், அவர் எழுதிய விடைத்தாளை நேரில் காண உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் OMR விடைத்தாள்கள் மற்றும் கேள்விக்கான அனைத்து பதில்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களில் குளறுபடி உள்ளதாக கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் ஆன்லைனில் பார்த்ததில் 564 மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தேர்வு முடிவில் தனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மாணவி கூறியுள்ளார்.
மாணவியின் இந்த மனுவை ஏற்ற மதுரை கிளை உயர்நீதிமன்றம் அவர் தான் எழுதிய விடைத்தாளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM