இடஒதுக்கீடு சாதி பிரச்சனை அல்ல; சமூக நீதி பிரச்னை..! – தைலாபுரத்தில் அன்புமணி பேச்சு..!

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று

தலைவர்

தலைமையில் தைலாபுர தோட்டத்தில் உள்ள

சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய

அன்புமணி ராமதாஸ், “இதற்கு முந்தைய ஆட்சியில் 20 சதவீதஇடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. உயர்நீதிமன்றம் ரத்து செய்த ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் கூட திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இடஒதுக்கீடு என்பது சாதி பிரச்சனை இல்லை சமூக நீதி பிரச்சனை.

தமிழகத்தில் இரு பெறும் சமூகங்களான தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமூகம் பின் தங்கியுள்ளனர் இந்த இரு சமூகங்களும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ள சட்டமன்றத்திலேயும், வெளியேயும் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு விரையில் சட்டம் கொண்டு வருவார்கள் என எதிர்ப்பார்கிறோம். தமிழக அரசு 10.5%

சதவீத இடஒதுக்கீட்டை உரிய தரவுகளுடன் அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்சார கட்டண உயர்வை சிறிதளவும் ஏற்க முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் காரணங்கள் வேடிக்கையான காரணங்கள். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போராடிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேறொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். கொரோனாவுக்கு பிறகு பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது. மக்களுக்கு அது மிகப்பெரிய சுமையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என அமைச்சர் சொல்லும் காரணம் பொய்யானது. அதனை ஏற்க முடியாது, மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் பாமக சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.

கொலை குற்றங்கள், பாலியல் சீண்டல்களுக்கு காரணமாக இருப்பது மது மற்றும் போதைப் பொருட்கள் தான். இது தொடர்பாக சமீபத்தில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றது. அதில் அதிக அளவில் விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக அளவில் விபத்து, மன நோயாளிகள் மற்றும் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.