கள்ளக்குறிச்சி மாணவி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள்- மாவட்ட நிர்வாகம் அனுமதி

கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து வன்முறை நிகழ்ந்த பள்ளியில் மறுசீரமைப்பு கட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததை அடுத்து, ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை 10 நாட்களில் பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
image
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனமுடன் பரிசீலித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க பள்ளி கட்டடங்களை சீரமைக்க 45 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
image
மேலும் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெறும் எனவும், பள்ளிக்கட்டடங்களின் மறுசீரமைப்பைத் தவிர இதர பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.