போபால்: இன்று 72-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி, குணோ தேசிய பூங்காவில் சீட்டாக்களை திறந்து விடும் நிகழ்ச்சியில் தொப்பியும் தோளில் பாஜக கொடி நிறத்திலான துண்டு அணிந்தபடியும் வந்திருந்தது கவனம் பெற்றது.
பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் என்றால் அது சிறுத்தை தான்.
பூனை இனங்களில் முக்கியமான விலங்கினமாக இது கருதப்படுகிறது. இந்த சிறுத்தையிலும் லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகைகள் உள்ளன.
சீட்டாக்கள்
இதில் சீட்டா என்பது முகம் சிறியதாகவும் வால் பகுதி பெரிதாகவும் இருக்கும். இதேபோல் இதன் முன் கால்களை விட பின் கால்கள் மிக பெரிதாக இருப்பதால் அதிவேகத்தில் ஓடும் திறன் படைத்தது. சுமார் 80-130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் சீட்டா, 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் அடைந்துவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். எனவே இது போன்ற விலங்கினங்களை நம் நாட்டில் வளர்ப்பதற்கு இந்திய வனத்துறை ஆர்வம் காட்டியது.
நமீபியாவுடன் ஒப்பந்தம்
அதன்படி தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 8 சீட்டாக்கள் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டன. முதலில் கடந்த மாதம் 15-ஆம் தேதி கொண்டு வர திட்டமிடப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 5 ஆண் 3 பெண் சீட்டாக்களை அழைத்து வருவதற்காக அதற்கென பிரத்யேகமான தனி விமான நமீபியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீட்டாக்களை திறந்து விட்டார்
பின்னர் இன்று காலை அந்த விமான குவாலியர் விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு மரக்கூண்டுகளில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. பின்னர் மரக்கூண்டுகளில் இருந்து பிரதமர் மோடி வனத்திற்குள் எட்டு சீட்டாக்களையும் திறந்துவிட்டார். இந்திய மண்ணில் காலடி எடுத்த வைத்த சீட்டாக்கள் முதலில் அங்கும் இங்கும் நடந்து புதிய வசிப்பிடத்தை நோட்டம் விட்டது.
தொப்பி அணிந்தபடி
இதனை பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாதுகாப்பாக சற்று தொலைவில் இருந்த ரசித்து கொண்டிருந்தனர். பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று இந்த சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டன. எப்போதும் தனது உடைகளை நேர்த்தியக தேர்வு செய்து அணிவதில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று ஹைடெக் ஆக வலம் வந்தார். வழக்கமாக அணியும் உடைக்கு மேலே கவச உடை போல ஒன்றை அணிந்து இருந்த பிரதமர் மோடி கருப்பு நிற வட்ட வடிவிலான தொப்பியும் அணிந்தபடி வந்தார்.
புகைப்பட கலைஞர் போல
கூலிங் கிளாஸ் சகிதமாக சீட்டாக்களை திறந்து விட்ட மோடி, சீட்டாக்கள் வனத்தில் நடமாடும் காட்சிகளை கேமிரா மூலம் புகைப்படம் எடுத்தார். கைதேர்ந்த புகைப்பட கலைஞர் போல பல்வேறு கோணங்களில் சீட்டாக்களின் நடமாட்டத்தை மோடி படம் பிடித்தார். பிரதமர் மோடி ஆடை விஷயத்தில் எப்போதும் சற்று கூடுதல் அக்கறை காட்டுவார். தேர்தல் பிரசாரங்களின் போது அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணிந்து கவனம் பெறுவார்.
ஆடை விஷயத்தில்…
அதேபோல், சுதந்திர தினத்திலும் பிரதமர் மோடியின் உடைகள் அதிகம் பேசப்படும். அந்த அளவுக்கு உடை விஷயத்திலும் கூட மிக கவனம் செலுத்தி நேர்த்தியாக அணிவதில் பிரதமர் மோடிக்கு நிகர் அவரே.. இன்று 72-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி, குணோ தேசிய பூங்காவில் சீட்டாக்களை திறந்து விடும் நிகழ்ச்சியில் தொப்பியும் தோளில் பாஜக கொடி நிறத்திலான துண்டு அணிந்தபடியும் வந்திருந்தது கவனம் பெற்றது.
70 ஆண்டுகளுக்கு பின்
சத்தீஷ்கரில் கடந்த 1947-ம் ஆண்டு ஒரே ஒரு சீட்டா தென்பட்டதாகவும், அதன்பிறகு கடந்த 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீட்டா இந்திய மண்ணில் காலடி பதித்துள்ளது.