கொரியர்களை இழிவாக பேசினாரா சிவகார்த்திகேயன்?..இனவெறி பேச்சு.. ஆங்கில ஊடகங்கள் விமர்சனம்

நடிகர்
சிவகார்த்திகேயன்
அற்புதமான
தலைக்கனம்
இல்லாத
கலைஞர்
என்பதால்
அனைவராலும்
விரும்பப்படும்
நடிகர்.
இனவெறி
கலந்த
பேசியதாக
சர்ச்சையில்
சிக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன்
விஷத்தை
விதிக்கிறார்,
தன்
இனவெறி
பேச்சை
பள்ளி
மாணவர்களிடம்
கொண்டுச்
சென்றுள்ளார்
என்கிற
விமர்சனம்
எழுந்துள்ளது.

காமெடி
என்கிற
பெயரில்
இனவெறி
தூண்டல்
பேச்சால்
சிவகார்த்திகேயன்
ஆங்கில
ஊடகங்களாலும்,
நெட்டிசன்களாலும்
விமர்சிக்கப்படுகிறார்.

உழைப்பால்
உயர்ந்த
மனிதர்
சிவகார்த்திகேயன்

நடிகர்
சிவகார்த்திகேயன்
விஜய்
தொலைக்காட்சியில்
நிகழ்ச்சி
தொகுப்பாளராக
இருந்து
படிப்படியாக
முன்னேறி
தமிழ்
சினிமாவில்
கால்பதித்தார்.
மெரினா
படம்
மூலம்
ஹீரோவாக
அறிமுகமான
சிவகார்த்திகேயன்
தனது
நகைச்சுவையான
நடிப்பின்
மூலம்
இளம்
ரசிகர்களிடையே
பிரபலமானார்.
தொடர்ந்து
சொந்தமாகவும்
படமெடுத்தார்.
நெல்சன்
இயக்கத்தில்
அவர்
நடித்த
டாக்டர்,
சிபிசக்ரவர்த்தி
இயக்கத்தில்
நடித்த
டான்
வெளியாகி
வெற்றிகரமாக
ஓடியது.
தற்போது
பிரின்ஸ்
படம்
வர
உள்ளது.

உருவக்கேலி நகைச்சுவை

உருவக்கேலி
நகைச்சுவை

சிவகார்த்திகேயன்
மேடையில்
மிமிக்ரி
செய்வதில்
வல்லவர்.
நகைச்சுவையாகவும்
பேசுவார்.
அவர்
பணியாற்றிய
தொலைக்காட்சியில்
உருவக்கேலி
மட்டுமே
பெரிய
நகைச்சுவையாக
அடிக்கடி
சொல்லப்படும்.
திரைப்படங்களில்
கவுண்டமணி
காலத்தில்
அதிகமாக
இருந்த
உருவக்கேலி
தற்போது
குறைந்துள்ளது.
ஆனால்
தொலைக்காட்சிகளில்
அது
இன்றும்
உள்ளது.
சிவகார்த்திகேயனின்
டான்
படத்தில்
ஒரு
காட்சியில்
சூரியும்,
சிவகார்த்திகேயனும்
கொரிய
மொழிபோல்
தமிழ்
பேசுவார்கள்.
பெரிதாக
இந்து
ரசிக்கப்பட்டது.
சில
நிகழ்ச்சிகளில்
இதை
சிவகார்த்திகேயன்
பேசிக்காட்டி
கைத்தட்டல்
வாங்கினார்.

பள்ளி விழாவில் மாணவ-மாணவியர் முன் சிவகார்த்திகேயன் பேச்சு

பள்ளி
விழாவில்
மாணவ-மாணவியர்
முன்
சிவகார்த்திகேயன்
பேச்சு

இந்நிலையில்
சமீபத்தில்
பள்ளி
ஒன்றின்
விழாவில்
கலந்துக்கொண்ட
சிவகார்த்திகேயன்
மாணவ-மாணவியரிடையே
பேசும்போது
டான்
பட
காமெடியை
பேசிக்காட்டினார்
சிவகார்த்திகேயன்.
மாணவ-மாணவியர்

என
கூச்சலிட்டதும்
உற்சாகமான
சிவகார்த்திகேயன்
தான்
என்ன
பேசுகிறோம்
என்பதன்
முக்கியத்துவத்தை
உணராமலேயே
கொரிய
நடிகர்-நடிகைகளை
பற்றி
பேச
ஆரம்பித்தார்.
“நான்
எப்ப
கொரியன்
படம்
பார்த்தாலும்
அதில்
நடிக்கும்
எல்லோரும்
ஒரே
மாதிரித்தான்
தெரிவாங்க,
சில
நேரம்
எது
ஹீரோ
எது
ஹீரோயின்
என
தெரியாமலே
நான்
படம்
பார்த்திருக்கிறேன்”
என்று
பேச
ஒரே
ஆரவாரம்.

தவறான பேச்சு கண்டிக்கும் நெட்டிசன்

தவறான
பேச்சு
கண்டிக்கும்
நெட்டிசன்

தற்போது
சிவகார்த்திகேயன்
கொரிய
மொழியை
கேலி
செய்கிறார்
(டானின்
அந்த
இனவெறி
“நகைச்சுவை”
வரிசையின்
அடிப்படையில்),
அனைத்து
கொரியர்களும்
ஒரே
மாதிரியாக
இருப்பார்கள்,
அவர்களில்
ஆண்,
பெண்
வித்தியாசம்
தெரியவில்லை
என்று
கூறுகிறார்.
இது
அப்பட்டமான
ரேசிஷம்,
இனவெறி
பேச்சு
என
ஆங்கில
ஊடகங்கள்,
நெட்டிசன்கள்
கண்டித்துள்ளனர்.
ஒருவர்
நிறம்,
இனம்,
உருவம்
பற்றி
பேசக்கூடாது
என்பது
உலக
நாடுகள்
அளவில்
இன்றும்
கடுமையாக
கடைபிடிக்கப்படுகிறது.
கருப்பின
மக்களை
அவர்களைப்பற்றி
குறிக்கும்
ஒரு
குறிப்பிட்ட
சொல்லை
பயன்படுத்தக்கூடாது
என்பது
சட்டம்.

ஆங்கில ஊடகங்கள் விமர்சனம்

ஆங்கில
ஊடகங்கள்
விமர்சனம்

அப்படி
இருக்கும்போது
உருவக்கேலி,
ஆண்,
பெண்,
ஒரு
நாட்டு
மக்களின்
இனம்
குறித்து
சிவகார்த்திகேயன்
பேசியிருக்கிறார்.
அதுவும்
பள்ளி
குழந்தைகள்
மத்திடில்
ஒரு
நாட்டு
மக்கள்
பற்றி
குறிப்பிட்டு
பேசியதை
நெட்டிசன்கள்
இனவெறி
பேச்சு
என
கண்டித்துள்ளனர்.
ஒரு
நெட்டிசனின்
பதிவில்

சிவகார்த்திகேயன்
கொரிய
மொழியை
கேலி
செய்கிறார்
(டானின்
அந்த
இனவெறி
“நகைச்சுவை”
காட்சி
என்கிற
அடிப்படையில்),
அனைத்து
கொரியர்களும்
ஒரே
மாதிரியாக
இருப்பார்கள்,
அவர்களின்
பெண்கள்
ஆண்களைப்
போல
இருக்கிறார்கள்
என்று
கூறுகிறார்.
இவை
அனைத்தும்
ஒரு
பள்ளியில்,
குழந்தைகள்
முன்னிலையில்
நடந்த
நிகழ்வில்
கூறுகிறார்.
நமது
பிரபலங்கள்
சிறப்பு
உணர்வு
சம்பந்தப்பட்ட
விஷயங்களை
அறியும்
பயிற்சி
பட்டறைகளில்
கலந்து
கொள்ள
வேண்டும்”
என
கண்டித்துள்ளார்.

கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

கடுமையாக
விமர்சிக்கும்
நெட்டிசன்கள்

“இது
எவ்வளவு
மோசமானது
என்பதைக்
காட்டுகிறது.
இது
நச்சுத்தனமான
ஒன்று
என
ஒரு
நெட்டிசன்
கண்டித்துள்ளார்.
இன்னொரு
நெட்டிசன்
“கல்வி
நிறுவனங்களில்
நடிகர்களின்
கலந்துக்கொள்வது
இதுபோன்ற
பேச்சுக்களுக்காகத்தானா
என
கூட்டத்தின்
நோக்கத்தை
கேள்வி
எழுப்பினார்,
“இதைத்தான்
நான்
சொல்கிறேன்,
இந்த
மனிதர்
உண்மையில்
நச்சுத்தன்மையுள்ளவர்,
அவருடைய
எல்லா
படங்களிலும்
அவன்
எதைப்
பிரதிநிதித்துவப்படுத்துகிறார்
(பின்தொடர்வது,
பின்தங்கிய
சித்தாந்தங்கள்,
இனவெறி,
உருவக்கேலி
நகைச்சுவை).
தமிழ்
சினிமாவை
100
ஆண்டுகள்
பின்னோக்கி
இழுக்கிறது”
எனக்கண்டித்துள்ளார்.

தமிழர்களின் நிறம், மொழி பற்றி மற்றவர்கள் பேசுவது போல் இருக்கு - நெட்டிசன்

தமிழர்களின்
நிறம்,
மொழி
பற்றி
மற்றவர்கள்
பேசுவது
போல்
இருக்கு

நெட்டிசன்

அடுத்து
ஒரு
தமிழ்
ரசிகர்
பின்தொடர்வது,
உருவக்கேலி,
இனவெறி
அடுத்து
என்னண்ணா?
இந்தியர்களுக்கு
எது
உணர்வுபூர்வமானது,
உணர்வு
பூர்வமற்றது
என
தெரியாமல்
உள்ளனர்.
கொரியர்கள்
ஆண்,பெண்
வித்தியாசம்
இல்லாமல்
இருக்கிறார்கள்
ஒரே
மாதிரியாக
தெரிபவர்களாக
இருந்தாலும்
அது
ஒரு
நகைச்சுவையா?
இது
எப்படி
இருக்கிறது
என்றால்
தமிழர்கள்
நிறம்,
மொழி
பற்றி
வடக்கர்கள்
கிண்டலடிப்பது
போல்
உள்ளது
என
வேதனை
தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின்
இந்த
பதிவுகள்,
அதற்கு
நெட்டிசன்களின்
எதிர்ப்புகளை
ஆங்கில
ஊடகங்கள்
பதிவு
செய்து
விமர்சித்து
வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.