சசிகலாவை விமர்சிக்கும் திவாகரன் நண்பர்: சூடாகும் டெல்டா பாலிடிக்ஸ்!

அதிமுக உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசைகட்டி வந்த நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மின் கட்டண உயர்வை நினைத்து மக்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கையாகவும், மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான்.

எடப்பாடி தலைமையில் தான் அதிமுக உள்ளது. வேறு யாரும் எதைச் சொன்னாலும், அவர்கள் ஆசைக்கு சொல்லிக்க வேண்டியது தான். நடக்கப்போவதில்லை. மேலும்

– வைத்திலிங்கம் சந்திப்பு எதார்த்தமானது அல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. அதிமுகவை வளம் பெற செய்யுவும், பலம் பெற செய்யவும், அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் நினைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கு துணை போகும் வேலையில் ஈடுபடுவது அதிமுகவை அழிக்கும் வேலையாக தான் இருக்கும்” என தெரிவித்தார்.

சசிகலா, வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் ஆகியோர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். காமராஜும் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் பொது இடங்களில் இப்போதும் நட்பு பாராட்டி வருகின்றனர். அப்படியிருக்க சசிகலாவை விமர்சித்து பேசியிருப்பது டெல்டா மாவட்ட அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.